ஜோதிடம்

கும்பம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க..!

Kumbam Krodhi 2024: ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று குரோதி வருடம் ஆரம்பம் ஆகிறது. இந்த வருடம் கும்பம் ராசி அன்பர்களுக்கு எத்தகைய பலன்களை கொடுக்க இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாயும் சனியும் இணைந்து கும்ப ராசியில் அமர்கிறார்கள். எதிரும் புதிருமாக இருக்கும் இருவர் இணைந்து ஒரே இடத்தில் அமர்வதால் இந்த வருடம் சிக்கலான வருடமாக தான் பார்க்கப்படுகிறது.

ஒரு நிலையிலிருந்து கீழே இறங்க விரும்பாதவர்கள் கும்ப ராசி அன்பர்கள். உங்களுக்கு ராசி அதிபதியான சனீஸ்வரன் ஏழரை சனியாக இருக்கிறார். அவருடன் மூன்று மற்றும் 10-ஆம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் வந்து அமர்ந்திருக்கிறார். இதனால் கடுமையாக முயற்சி செய்பவர்கள் கூட மெத்தனமாக இருக்க தொடங்குவார்கள்.

எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் மற்றவர்களிடமும் கலந்தாலோசித்து எடுப்பது நல்லது. குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். கணவனுடன் வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டும்.

இரண்டில் ராகுவும் எட்டில் கேதுவும் இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். தந்தையாருடன் எந்த வாக்குவாதத்தையும் ஏற்படுத்தி கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்த செல்வது நல்லது. இல்லையென்றால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

வருடம் தொடங்கி 15 நாளில் இடம்பெயரும் குரு நல்லதும் செய்வார் அதேநேரம் அனுபவத்திற்காக சிக்கல்களையும் கொடுப்பார். இந்த வருடம் திருமணம் கைகூடும். யாரிடமும் தேவையற்ற விஷயங்களை பேச வேண்டாம். நீங்கள் ஒன்று கூற மற்றவர்கள் வேறு ஒன்றை பரப்பி விடுவார்கள்.

சுக்கிரன் கும்ப ராசிக்கு நல்லதையே செய்வார் வருட தொடக்கத்திலேயே ராசியில் உச்சமாக இருக்கிறார் ஆனாலும் பெண்களால் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் கவனமாக இருக்க வேண்டும். இந்த வருடம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு அமையும். கடன்களில் இருந்து வெளியேற இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் பல நன்மைகளைப் பெற சிவாலயங்களுக்கு சென்று சிவபெருமானை வணங்குவது சிறப்பு.

Published by
Aadhi Devan

Recent Posts