ஒரு இனிய அனுபவத்தை தரும் மார்கழி மாதத்தில் தினமும் இந்த பூஜை செய்யுங்கள்

மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி. கிருஷ்ண பரமாத்மா இந்த மாதத்தில் தான் நான் இருக்கிறேன் என்று சொன்னார். தேவர்களின் விடியற்காலையாக அமையும் மாதம் இது. தேவர்களுக்கு இது பொழுது புலரும் பிரம்ம முகூர்த்த காலம்.

இந்த மாதத்தில் காலையில் ஒரு நாள் பூஜை செய்து இறைவனை வழிபட்டால் ஒரு ஆண்டு வழிபட்ட அந்தப் பலன் நமக்குக் கிடைக்கும்.
அந்த வகையில் தனுர் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதைப் பற்றிப் பார்ப்போமா…

இந்த மார்கழி மாதத்தில் அருகில் உள்ள சிறிய கோவிலுக்கு ஒரு நாள் அபிஷேகத்துக்குக் கொடுங்க. தனுர் பூஜையில் கலந்துக் கொள்ளுங்கள். மார்கழி மாதம் முழுவதும் வீட்டின் வாசல்களில் கோலம் போடுவோம்.

Markali magathuvam
Markali magathuvam

அதை அதிகாலையில் எழுந்து போட முடியாது. ரொம்ப குளிரா இருக்கும்னு சிலர் இரவில் போடுவர். அப்படி எல்லாம் போடக்கூடாது. காலையில் தான் இந்தக் கோலத்தைப் போட வேண்டும். வாசலில் மண் அகல் விளக்கு தீபம் ஏற்ற வேண்டும். அப்புறம் வீட்டில் வழக்கமா சுவாமிக்கு தீபம் ஏற்றி வழிபடுங்க.

சாதாரண விளக்கில் பஞ்சு திரி போட்டு எண்ணை ஊற்றி தீபம் வழிபடணும். இறைவனுக்கு ஏதாவது ஒரு மலரை காலை நேரத்தில் சாற்றி வழிபட்டால் அதுவே போதும். அந்த வழிபாட்டுக்கு இணையான வழிபாடு எதுவுமே கிடையாது.

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது ரொம்ப நல்லது. பொதுவாக சூரிய உதயத்திற்குள் வழிபாடு செய்வது உத்தமம்.

காலையில் செய்யும் இந்த வழிபாடு ஒரு புதுமையான வழிபாடாக நன்மையைத் தரக்கூடியதாக இருக்கும். நிலை வாசலுக்கு முன் ஒரு சின்ன இலையை வைத்து அல்லது சின்னதா ஏதாவது ஒரு தட்டை வைத்து இந்த விளக்கை ஏற்றலாம். தரையில் வைக்கக்கூடாது.

திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பாடல்களையும் பாடி அதன் தாத்பரியங்களையும், தத்துவங்களையும் வாழ்க்கையோடு அதன் தொடர்பையும் நாம் உணர்ந்து கொண்டு வாழ்வில் மகிழ்ச்சிகரமாக வாழ்வோம்.

அதிகாலையின் இனிமையை உணரும் புத்துணர்ச்சி தரும் மாதமாக அமைகிறது இந்த மார்கழி மாதம்.

குளிர்காலம் இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. அதிகாலைப் பொழுதில் பனியின் சுவாசத்தை நாம் உணரலாம். அதிகாலைப் பொழுதில் காஸ்மிக் கதிர்கள் விண்ணிலிருந்து நேரடியாக பூமியில் விழுகிறது. இது உடலுக்குள் ஊடுருவி பல அற்புத ஆற்றல்களைத் தருகிறது.

Thiruppavai
Thiruppavai

விஷ்ணு கோவில்களில் திருப்பாவையும், திருப்பதி திருமலையில் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் பாடுவர். முக்கியமாக எல்லா பெருமாள் கோவில்களிலும் காலையில் சுப்ரபாதம் தான் பாடுவர். ஆனால் மார்கழியில் மட்டும் திருப்பாவை பாடுவர்.

இந்த மாதத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் மற்ற மாதங்களைக் காட்டிலும் ஆக்சிஜனின் அளவு அதிகமாக இருக்கும். அதிகாலையில் பஜனைக் குழுவினருடன் சேர்ந்து பாடுதல் புண்ணியம் தரும். இந்த மாதத்தில் விதைக்கக்கூடாது.

திருமணம் செய்யக்கூடாது. சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து விடுவது மிகவும் நல்லது. புதுமனையில் குடிபுகக் கூடாது. புதுக் கட்டிடத்திற்கு அலுவலகத்தை மாற்றி அமைக்கக் கூடாது.

ஏன் என்று நீங்கள் கேட்கலாம். இந்த மாதத்தில் தான் துரியோதனன் தனது ராஜ்ஜியம் முழுவதையும் இழந்து தவித்தாராம். அதே போல பத்திரப்பதிவும் செய்து விடக்கூடாது.

இந்த இனிய மாதம் சைவத்தையும், வைணவத்தையும் ஒன்றிணைக்கும் மாதமாக விளங்குகிறது. அதாவது இந்த மாதம் முழுவதும் சிவன் கோவில்களிலும் பெருமாள் கோவில்களிலும் விசேஷம்தான். அதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ்சும் இந்த மாதத்தில் தான் வருகிறது.

இந்த அற்புதமான மார்கழி மாதம் வரும் 16.12.2022 (வெள்ளிக்கிழமை) அன்று வருகிறது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.