15 ரூபாயுடன் சென்னைக்கு வந்து 250 படங்களில் நடித்தவர்.. சிசர் மனோகர் திரையுலக பயணம்..!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர்கள் கூட சில சமயம் ரசிகர்களின் கவனத்தை பெற்று பிரபலமாவார்கள். அந்த வகையில் தயாரிப்பு நிர்வாகத்தில் சிறிய வேலை பார்த்துக் கொண்டிருந்த மனோகர் என்பவர் திடீரென ஒரு படத்தில் தலைகாட்டி, அந்த படத்தின் மூலம் பிரபலமானதால் அதன் பிறகு 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அவர்தான் சிசர் மனோகர்.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மனோகர் சென்னைக்கு 15 ரூபாயோடு வந்தவர். ஆறாம் வகுப்பு பெயில் ஆகிவிட்டதை அடுத்து அம்மா அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு அவர் சென்னை வந்தார். சென்னையில் தி நகரில் உள்ள ஒரு பால் கடையில் வேலைக்கு சேர்ந்து வீடு வீடாக அதிகாலையில் சென்று பால் ஊற்றி உள்ளார்.

1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

அதன் பிறகு தெலுங்கு பட இயக்குனர் ஒருவரை சந்தித்ததை தொடர்ந்து அவருடைய வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு ஒரு ஹோட்டலில் வேலை செய்துள்ளார். இவ்வாறு சின்ன சின்ன வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தான் அவருக்கு ஒரு லாட்ஜில் வேலை கிடைத்தது. அந்த லாட்ஜில் சினிமாக்காரர்கள் அதிகம் தங்கி இருந்ததன் காரணமாக அவருக்கு சினிமாக்காரர்களுடன் நட்பு ஏற்பட்டது.

முதலில் சினிமா தயாரிப்பு யூனிட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்தார். அதன் பிறகு அவர் தயாரிப்பு யூனிட்டில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அதுமட்டுமின்றி அவர் ப்ரொடக்ஷன் யூனிட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார். குறிப்பாக நடிகை ரதி நடித்த கருமையில் ஒரு அழகு என்ற படத்தில் ரதிக்கு தம்பியாக நடித்தார்.

அதன் பிறகு மீண்டும் தயாரிப்பு யூனிட்டில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் தான் கன்னி ராசி திரைப்படத்தில் தயாரிப்பு யூனிட்டில் பதவி உயர்வு கிடைத்தது. அதன் பிறகு 150-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்த நிலையில் தான் அகத்தியன் இயக்கத்தில் உருவான கோகுலத்தில் சீதை என்ற படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

3 ரூபாய் சம்பளத்தில் ஆரம்பித்த லூஸ் மோகன்.. மெட்ராஸ் பாஷையில் கலக்கிய நடிகர்..!!

அந்த படத்தில் சிகரெட் பிடித்தபடி வந்து இடையில் புகுந்து என்ன ரூம் வேணுமா? என்று கேட்கும் ஒரு சின்ன கேரக்டர் தான். அந்த படத்தில் தான் ’நான் வெறும் மனோகர் அல்ல, சிசர் மனோகர்’ என்று கூறியபடியே சிகரெட்டை ஸ்டைலாக அடித்துக் கொண்டு செல்வார். அதன் பிறகு தான் அவர்  பெயர்  சிசர் மனோகர் என்று மாறிவிட்டது.

இதனை அடுத்து கே எஸ் ரவிக்குமார் தனது திரைப்படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கேரக்டரில் வாய்ப்பு கொடுத்தார். 1997 ஆம் ஆண்டு துள்ளித் திரிந்த காலம் என்ற படத்தில் இவர் பேசிய வசனம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. பல்லால் மூக்கை கடிப்பியா என்ற காமெடி, வடிவேலுவுடன் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் செய்யும் காமெடி உள்பட பல காமெடி வேடங்களில் இவர் பிரபலமானார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!

அஜித் நடித்த ஆழ்வார், வரலாறு, விஜய்யின் போக்கிரி, விஜயகாந்தின் சபரி, கமல்ஹாசனின் தெனாலிராமன் உள்பட பல படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வெளியான ’கிக்’ உள்பட சில படங்களில் கூட அவர் நடித்துள்ளார். தமிழில் சுமார் 250 படங்கள் வரை நடித்துள்ள சிசர் மனோகர், இன்னும் பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...