வில்லனாகவும் குணச்சித்திர கேரக்டரிலும் அசத்தியவர்… இப்படி ஒரு நடிகர் இனி கிடைப்பாரா?

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் குறித்து தற்போது பார்ப்போம்.

கடந்த 80கள் என்பது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று கூறலாம். அப்போதுதான் புதிய புதிய இயக்குனர்கள், புரட்சிகரமான படத்தை இயக்க சினிமாவில் அறிமுகமானார்கள். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா போன்ற இயக்குனர்களும் இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களும் பல்வேறு புதுமுக நடிகர்களும் 80கள் மற்றும் 90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்கள். எனவே தான் இந்த காலத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றே கூறலாம்.

படுக்கையில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்த எம்ஜிஆர்-சிவாஜி பட நடிகை..!

அந்த வகையில் கடந்த 1978ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜயன். பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார் விஜயன். அவருடைய நடிப்பு ஆர்வத்தை கவனித்த பாரதிராஜா அவருக்கு பட்டாளத்தான் என்ற கேரக்டரை இந்த படத்தில் கொடுத்தார். அந்த கேரக்டர் இன்றுவரை பேசப்படும் கேரக்டராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

vijayan1

இதனை அடுத்து ‘உதிரிப்பூக்கள்’ என்ற மகேந்திரன் இயக்கிய படத்தில் விஜயன் நடித்தார். அந்த காலத்திலேயே ஒரு சைக்கோ வில்லனை முக்கிய கேரக்டராக கொண்ட படம். அந்த படத்தில் விஜயன் நடிப்பில் அசத்தியிருப்பார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் முந்திய காட்சியில் ஒரு சீன் வரும், அதில் இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் வராத புதுமையான சீனாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியில் ஊரே ஒன்று கூடி அவரை தற்கொலை செய்து கொள்ளுமாறு வலியுறுத்துவதும் அதனை அவர் செய்து காட்டுவதும் மிக அற்புதமான நடிப்புடன் அந்த படம் முடிந்திருக்கும்.

அதேபோல் ‘அன்புக்கு நான் அடிமை’ படத்தில் ரஜினிக்கு அண்ணனாகவும், பல படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திரமாகவும் நடித்த அவருடைய தனித்தன்மையான நடிப்பு, ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ் ஆகியவை அன்றைய ரசிகர்களை மிகவும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மரணம் அடைந்தபோது 2 மாத கர்ப்பம்.. தென்னிந்திய பிரபல நடிகையின் சோக முடிவு..!

குறிப்பாக 1980ஆம் ஆண்டில் மட்டும் அவர் 11 படங்களில் நடித்தார். அதில் ‘பசி’ என்ற படம் மிகவும் முக்கியமானது. கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தார். அந்த படத்துடன் அவர் திடீரென காணாமல் போனார்.

vijayan2

சுமார் 10 ஆண்டுகள் வரை எங்கே சென்றார்? என்ன செய்து கொண்டிருந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் ‘ரன்’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆனார். அவருக்கு திருப்புமுனை கொடுத்தது ‘ரமணா’ என்ற படம் தான். அந்த படத்தில் விஜயகாந்த்துக்கு இணையாக அட்டகாசமான வில்லனாக நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ‘7ஜி ரெயின்போ காலனி’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

நடிகர் விஜயன் நடித்து வெளியான கடைசி திரைப்படம் ‘சதுரங்கம்’. இந்த படத்தை அடுத்து அவர் ‘ஆயுதம் செய்வோம்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் படப்பிடிப்பின்போது அவர் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் திரை உலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

நடித்தது 9 படங்கள்.. 9ம் சூப்பர்ஹிட்.. திடீரென காணாமல் போன கோடீஸ்வரரின் மகன் நடிகர்..!

நடிகர் விஜயன் முன்னாள் கேரள முதல்வர் ஏ.கே.நாயனார் உறவினரை திருமணம் செய்து கொண்டார் என்றாலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த தகவலும் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர்களுள் விஜயனும் ஒருவர் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...