இந்தியில் செல்லாக் காசான 16 வயதினிலே.. சொல்லச் சொல்ல கேட்காத பாரதிராஜா.. பல வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை!

எவ்வளவு புகழ் பெற்ற இயக்குனராக இருந்தாலும், ஹீரோவாக இருந்தாலும் மக்களின் ரசனைக்கு ஏற்றபடி படம் இல்லை எனில் உடனே ஊத்திக் கொள்ளும். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. தமிழில் ஸ்டூடியோவுக்குள் சுருண்டு கிடந்த சினிமாவை கிராமத்துப் பக்கம் அழைத்து வந்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. 16 வயதினிலே என்ற படத்தைக் கொடுத்து ரஜினி, கமல்,  ஸ்ரீதேவி, கவுண்டமணி எனப் பலருக்கும் திருப்புமுனையாக இருந்தவர்.

சப்பாணியான கமல், மயிலாக ஸ்ரீதேவி, பரட்டையாக ரஜினிகாந்த் ஆகியோர் கிராமத்து மனிதர்களாகவே வாழ்ந்திருப்பார்கள். ஸ்ரீ தேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

தமிழில் க்ளாசிக் ஹிட்டாக அமைந்த 16 வயதினிலே திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி மோகன்பாபு ஆகியோர் நடித்திருந்த இந்த படம் அங்கேயும் வெற்றி பெற்றதை தொடர்ந்து படம் இந்தியில் சொல்வா சவான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில், அமோல் பலேக்கர் நாயகனாக நடித்த நிலையில், ஸ்ரீதேவி இந்த படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். வெற்றிப்படத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்தாலும், 16 வயதினிலே இந்தி ரீமேக் படுதோல்வியை சந்தித்தது.

ஆபிஸ் பையனுக்கு புரியாததால் மொத்த பாட்டையும் மாற்றிய கண்ணதாசன்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்

தமிழ் தெலுங்கில் வெற்றி பெற்ற இந்த படம் இந்தியில் ஏன் வெற்றியை பெறவில்லை என்பது இயக்குனர் பாரதிராஜாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் பல வருடங்களுக்கு பிறகு உண்மை தெரியவந்துள்ளது. அது என்னவென்றால் சொல்வா சவான் படம் இந்தியில் எடுக்கப்பட்டது அல்ல என்றும், அது ஒலு போஜ்பூரி மொழியில் எடுக்கப்பட்ட படம் என்றும் தெரியவந்துள்ளது.

படத்திற்கு கதை திரைக்கதை பாரதிராஜா எழுதி இருந்தாலும், வசனம் டாக்டர் சங்கர் கேஷ் என்பவர் எழுதியிருந்தார். ஆனால் அவர் எழுதியது இந்தி மொழி அல்ல என்றும், பீகார் மற்றும் நேபாள எல்லையில் பேசப்படும் போஜ்பூரி மொழியில் எழுதியிருந்தாதால், அந்த படம் இந்திப்படமாக இல்லாமல் ஒரு போஜ்பூரி படமாக மக்கள் மத்தியில் பதிந்துவிட்டது. இதனால் தான் 16 வயதினிலே இந்தியில் ஜொலிக்காமல் போனது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews