தமிழில் தேடி வராத வாய்ப்பு.. கன்னடத்தில் கிடைத்த தேசிய விருது.. சூர்யாவுக்கு அம்மாவாக நடித்த நடிகையின் திரைப்பயணம்..

தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் கன்னட திரை உலகிலும் அசத்தலாக நடித்து பெயர் எடுத்த நடிகை தாராவின் திரை வாழ்க்கையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

நடிகை தாரா, கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். சிறுவயதில் அவர் கலை, நாட்டியம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 1984 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் உருவான ’இங்கேயும் ஒரு கங்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். கலைமணி தயாரிப்பில், முரளி நடிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் காரணமாக அடுத்தடுத்து சில தமிழ் படங்களிலும் தாரா நடித்து வந்தார்.

இதற்கு மத்தியில் தனது தாய் மொழியான கன்னட திரைப்படங்களில் தமிழ் படங்களை விட அவர் அதிகம் நடித்துள்ளார். விஜயகாந்துடன் ஜனவரி 1 என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் தாரா நடித்திருந்த போதும் பெரிய அளவிலான வாய்ப்புகள் அவரை தேடி வரவில்லை என்று தான் தெரிகிறது.

tara1

இதனால் அவர் கன்னட திரை உலகிற்கு சென்றார். 1985 முதல் ஏராளமான கன்னட படங்களில் நடித்து வந்த தாரா, சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். இதில், கன்னடத்தில் உருவான ஹசீனா என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்திருந்தது.

இதற்கு மத்தியில், தமிழில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தில் சிறு கேரக்டரில் நடித்தார். இதனை அடுத்து முரளி, சீதா நடித்த  ’துளசி’ என்ற படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்திலும் நடித்தார் தாரா. பின்னர் மீண்டும் கன்னட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த தாரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த் நடித்த ’சிறையில் பூத்த சின்ன மலர்’ என்ற தமிழ் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கில் சில படங்கள் நடித்த தாரா, கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற திரைப்படத்திலும், அதன் பின்னர் சூர்யா நடித்த ’மாற்றான்’ என்ற திரைப்படத்தில் சூர்யாவின் அம்மாவாகவும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்த ’சத்ரியன்’ என்ற படத்தில் நடித்த அவர் அதன் பிறகு முழுக்க முழுக்க கன்னட திரைப்படங்களில் தான் நடித்தார்

நடிகை தாரா திரையுலகில் மட்டுமின்றி பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு, கர்நாடக மாநிலத்தின் சார்பில் எம்எல்ஏவாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் பிரபல ஒளிப்பதிவாளர் வேணுகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் உள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...