தயாரிப்பாளர்களின் ஹீரோ இவர்தானா? சம்பளத்தை கண்டுக்கவே மாட்டராமே..!

தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ஜெய்சங்கர் தயாரிப்பாளர்களின் ஹீரோவாக தமிழ் சினிமாவில் போற்றப்படுகிறார்.  பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் 1965-ல் வெளிவந்த இரவும் பகலும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.

இவருடைய சமகால ஹீரோக்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன் ஆகியோர் திரையில் அசுர வளர்ச்சி அடைய தனக்கென்று தனி பாணியைக் கடைப்பிடித்தார். சண்டைக் காட்சிகளில் இவரது உழைப்பு அதிகம் பேசப்பட்டதால் பெரும்பாலான கமர்ஷியல் திரைப்படங்களில் ஜெய்சங்கர் ஹீரோவாக ஜொலித்தார். நடிக்க வந்த 9 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனை புரிந்தார். மேலும் சக ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து புகழின் உச்சிக்குச்  சென்றார்.

இவரது படங்கள் பெரும்பாலும் சண்டைக்காட்சிகள், துப்பறியும் கதாபாத்திரங்களாக அமைந்ததால் மக்கள் இவரை தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று அடைமொழி கொடுத்து அழைத்தனர்.

மேலும் படப்பிடிப்பு அரங்கினுள் இவர் நுழையும் போது, சக தொழிலாளர்களுடன், இனிமையாகப் பழகி, கலகலப்பான சூழலுக்கு வித்திட்டார்.  தயாரிப்பாளர்,பேசிய சம்பளத்திலிருந்து குறைத்துக் கொடுத்தாலும் கண்டு கொள்ளமாட்டார். மீண்டும் அதே தயாரிப்பாளரே கால்ஷீட் கேட்டாலும் கொடுத்து விடுவார். படப்பிடிப்பிற்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பார்.

“டேய்.. அண்ணான்னுதான் விஜய்யை கூப்பிடுவா..!” விஜய்யின் தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஷோபா

தன்னுடைய படங்கள் தோல்வி அடைந்து தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுத்தால் சம்பளத்தைக் குறைத்து தன்னுடைய அடுத்த படத்திற்கும் கால்ஷீட் கொடுத்து தயாரிப்பாளர்களை வாழ வைத்தார். இதுமட்டுமல்லாது இவர் நடித்த காலகட்டங்களில் தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் இவரது படம் ரிலீஸ் ஆகாமல் இருக்காது. எனவே வெள்ளிவிழா நாயகன் என்ற பெயரையும் பெற்றார்.

நாயகனாக நடித்து முடித்த பின்னர் ரஜினியுடன் முரட்டுக் காளை படத்தில் வில்லனாக அவதாரம் எடுக்க தொடர்ந்து குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் ஜொலித்தார் ஜெய்சங்கர்.

இவரது பாணியைப் பின்பற்றி கேப்டன் விஜயகாந்த் அவர்களும் தயாரிப்பாளர்களை வாழ வைத்தார். புரட்சிக் கலைஞரின் படங்கள் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளரின் நஷ்டத்தில் பங்கெடுத்து தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருந்தனர். தற்போது அஜீத், விஜய் சேதுபதி போன்றோரும் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

இயக்குநர் ஹரியும் இந்த லிஸ்ட்டில் இருப்பவர்தான். தயாரிப்பாளரிடம் சொன்ன தேதிக்குள்ளாகவே படத்தை முடித்து பட்ஜெட்டிற்குள் கொண்டுவந்துவிடுவாராம்.

Published by
John

Recent Posts