“டேய்.. அண்ணான்னுதான் விஜய்யை கூப்பிடுவா..!” விஜய்யின் தங்கை குறித்து உருக்கமாக பேசிய ஷோபா

இன்று தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய்க்குப் பின்னால் சிறுவயதில் ஏற்பட்ட சோகம் இன்றும் அவரது மனதில் ஆறா வடுவாக உள்ளது. அவருக்கு இன்று ரசிகர்களாக கோடிக்கணக்கில் எண்ணற்ற தம்பி, தங்கைகள் இருந்தாலும் ரியல் லைப்பில் உடன்பிறந்த சகோதரி ஒருவர் இருந்துள்ளார்.

பேட்டி ஒன்றில் விஜய்யின் தங்கை குறித்து பேசிய பெற்றோர்களான ஷோபா-எஸ்.ஏ. சந்திரசேகர் தம்பதி இதுகுறித்து பேசியுள்ளனர். விஜய் பிறந்த பின் அவருக்குப் பின் ஒரு தங்கை பிறந்ததாகவும், மூன்றரை வயதில் அவர் உடல்நலக் குறைவால் இறந்து போனதாகவும் கூறியுள்ளனர்.

மேலும்  விஜய்க்கு நன்கு விபரம் தெரிந்தபின் அவரது தங்கை இறந்ததாகவும் இன்றும் அவரது நெஞ்சில் தங்கையின் மறைவு ஆறாத வடுவாகவும் இருப்பதாகத் தெரிவித்தனர். தளபதி விஜய்யை அவரது தங்கை, “டேய்.. அண்ணா இங்க வாடா“ என்றுதான் அழைப்பதாகவும் அப்பேட்டியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர். அவள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும், இந்த நிமிடம் வரை அவளை மிஸ் பண்ணுவதாகவும் ஷோபா கண்கலங்கி பேசியுள்ளார்.

Vijay family

கமலுக்கு முந்தைய காதல் இளவரசன் ‘கிழக்கே போகும் ரயில்’ சுதாகரா இது..? இப்படி மாறிட்டாரே!

அவர்களின் இந்தப்பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் விழாக்களில் பேசும்போது தம்பி, தங்கச்சிகள் என்றுதான் பல மேடைகளில்  பேச ஆரம்பிப்பார். அதே போல் விஜய் ரசிகர்களும் அவரை பாசத்துடன் அண்ணா என்றுதான் அழைத்து வருகின்றனர்.

தன்னுடைய பெரும்பாலான படங்களில் அக்கா, தங்கை  கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்திருப்பார் விஜய். திருப்பாச்சி, கில்லி, வேலாயுதம், சிவகாசி, தமிழன், நேருக்கு நேர் முதல் சமீபத்தில் வெளியான லியோ வரை சகோதரி உறவைப் போற்றும் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அண்ணன்-தம்பி உறவைப் போற்றும் வகையில் பகவதி, பத்ரி, செந்தூரப் பாண்டி போன்ற படங்களும், நட்பைப் போற்றும் ப்ரண்ட்ஸ், நண்பன் போன்ற படங்களிலும் நடித்து உறவுகளின் உன்னதத்தை தனது படங்களில் வெளிப்படுத்தி இருப்பார். அதனால் தானோ என்னவோ தளபதி விஜய்யை இயல்பாகவே அவரது ரசிகர்கள் அவரை தங்கள் சகோதரனாக ஏற்றுக் கொண்டு அவரின் வழியைப் பின்பற்றி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews