Tag: vijay

vijay karur1

தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை.. விஜய்யை தனிமைப்படுத்தி விட்டதாக கொண்டாடும் கட்சிகள் ஒன்றை மறந்துவிட்டன.. ஓட்டு போடுவது கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமல்ல, மக்களும் தான்.. மக்கள் விஜய் தான் வரவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் 23 கட்சி கூட்டணியும் தோற்கும், மத்தியில் அதிகாரம் உள்ள கூட்டணியும் தோற்கும்.. காசு கொடுத்துவிட்டால் ஓட்டு போடுவார்கள் என்ற கணக்கு இனி செல்லாது.. மக்கள்தான் எஜமானர்கள் என இன்றைய அரசியல்வாதிகள் மறந்து பல வருஷமாச்சு.. அதை ஞாபகப்படுத்த தான் விஜய் வந்துள்ளார். மக்கள் சுதாரித்தால் 50 வருட கட்சியும் தோற்கும், 75 வருட கட்சியும் தோற்கும்..!

மார்ச் 16, 2026, 14:59
vijay tvk

ஆளுங்கட்சி அல்லது எதிர்க்கட்சி அல்லது தொங்கு சட்டசபை.. இந்த மூன்றில் ஒன்றை செய்து காட்ட வேண்டும்.. ஏதாவது ஒரு திராவிட கூட்டணியை 3வது இடத்திற்கு தள்ள வேண்டும்.. தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட 2026 தான் சரியான நேரம்.. திமுக ஆட்சி மீதான அதிருப்தி.. சமீபத்தில் வெற்றியே காணாத அதிமுக கூட்டணி.. இந்த இரண்டு தான் நமக்கு முழு பலம்.. இப்போது ஆட்சியை பிடித்துவிட்டால் அல்லது ஆழமாக காலூன்றிவிட்டால் நம்மை 25 வருடங்களுக்கு யாராலும் அசைக்க முடியாது.. ரகசிய மீட்டிங்கில் விஜய் ஆவேசமாக கூறிய வார்த்தைகள்?

மார்ச் 16, 2026, 14:30
jayalalitha indira gandhi vijay

தேர்தல் அரசியலில் இந்திரா காந்தி, ஜெயலலிதாவே தோத்துருக்காங்க.. மாற்றம் வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டால் மெகா கூட்டணி அமைத்தாலும் ஆட்சி அமைக்க முடியாது.. மத்திய அரசின் அதிகாரம் இருந்தாலும் ஜெயிக்க முடியாது.. மக்களின் கோபத்தை பணமோ, சலுகை அறிவிப்புகளோ கொடுத்து சமாதானப்படுத்த முடியாது.. மக்களுக்கு உண்மையாக இல்லாதவங்க தான் கூட்டணியை நம்புவாங்க.. மக்களை நம்புறவங்க தனியாவே தைரியமா நிப்பாங்க.. நம்ம விஜய் போல.. தவெகவினரின் ஆவேச சமூக ஊடக பதிவுகள் வைரல்..!

மார்ச் 16, 2026, 14:05
vijay1

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு, இனிமேல் நம்ம சுயரூபத்தை காட்டனும்.. 234 தொகுதி வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை தயாரா இருக்குது.. ஒவ்வொன்னா ரிலீஸ் பண்ணனும்.. இனிமேல் தேர்தல் ஆணையம் கண்ட்ரோலில் போலீஸ் என்பதால் நம்ம பிரச்சாரத்திற்கும் ஈசியா அனுமதி கிடைக்கும்.. நம்ம கொள்கை என்ன? ஏன் அரசியலுக்கு வந்தோம்ங்கிறதை அடித்தட்டு மக்கள் வரைக்கும் புரிய வைக்கனும்.. தேர்தல் வரைக்கும் பம்பரமா சுழலனும்.. மீடியாவை யாரும் கண்டுக்கவே வேண்டாம்.. நம்ம டார்கெட் நடுநிலையாளர்கள் வாக்குகள் தான்.. நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுரை?

மார்ச் 16, 2026, 13:43
vijay

ஆட்சியை பிடிப்பது தான் இலக்கு.. ஆனால் அதுக்காக அதிமுக, பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் தான் ஆட்சின்னா, அப்படி ஒரு ஆட்சி எனக்கு தேவையே இல்லை.. மாற்றம்ன்னு சொல்லி வந்தவங்க எல்லாரும் மக்களை ஏமாத்திட்டாங்க, நானும் அப்படி செஞ்சா, எதிர்காலத்துல மக்கள் யாரையும் நம்ப மாட்டாங்க.. என்னால தனித்து நின்னே ஜெயிக்க முடியும்.. குறைந்தபட்சம் ஒரு திராவிட கட்சியை பின்னுக்கு தள்ள முடியும்.. நான் மக்கள நம்புறேன், மக்களும் என்னை நம்புவாங்க.. Confidenceஆ இருங்க.. நல்லதே நடக்கும்.. நிர்வாகிகளுக்கு தைரியம் கொடுத்த விஜய்?

மார்ச் 16, 2026, 07:57
vijay erode

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவதற்கும், தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கும் நான் எதற்காக உதவ வேண்டும்? மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் ஈபிஎஸ், மக்கள் என்றுமே விரும்பாத ஒரு கட்சின்னா அது பாஜக, இந்த ரெண்டையும் நான் வளர்த்துவிட்டா என்னை மக்கள் என்னன்னு நினைப்பாங்க? இதுக்கா நீ அரசியலுக்கு வந்தேன்னு கேட்க மாட்டாங்களா? காங்கிரசை மட்டும் எதிர்பார்த்தேன், அது நடக்கலை, அதனால தனியா தான் நிற்க போறேன், என் மேல நம்பிக்கை இருந்தா கட்சியில இருங்க, இல்லாட்டி வழியை பாத்துகிட்டு போயிகிட்டே இருக்கலாம்.. தீர்மானமாக சொன்னாரா விஜய்?

மார்ச் 15, 2026, 17:59
vijay 3

என்.டி.ஏவில் விஜய் சேர்ந்தால், தவெகவை உடைக்க திட்டம்? உடைச்சா உடைச்சிக்கோ, அங்க விஜய் தான் நம்பர் 1, மத்தவங்க எல்லாம் ஜீரோ.. ஜீரோவை வச்சு என்ன செய்ய போற? எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதிக்கு தான் மக்கள் ஓட்டு போட்டாங்க, இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அல்ல.. அதுபோல் மக்கள் ஓட்டு விஜய்க்கு தான்.. விஜய் பக்கத்துல இருக்குறவங்களுக்கு இல்லை.. தவெக பதிலடி..

மார்ச் 15, 2026, 17:29
vijay 7

வெளியில வேனும்னா அரசியல் எதிரின்னு திமுகவை சொல்லிக்கிடலாம், ஆனா 2026ல்ல நம்ம டார்கெட் அதிமுக தான்.. அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளியாச்சுன்னா, அடுத்த தேர்தலுக்குள்ள காணாமல் போயிடும்.. காங்கிரஸை திமுகவே அழிச்சிடும்.. பாஜக தமிழகத்தில் தலைதூக்கவே முடியாது.. அப்புறம் ஒரு 50 வருஷத்துக்கு திமுக vs தவெக தான்.. விஜய்யின் நீண்டகால மாஸ்டர் பிளான்?

மார்ச் 15, 2026, 11:50
vijay eps

100 தொகுதிகள், முதல்வர் பதவியெல்லாம் தர முடியாது.. 40 தொகுதிகள் மட்டும் தான்.. துணை முதல்வர் எல்லாம் கிடையாது.. விஜய்க்கு மட்டும் ஏதாவது ஒரு அமைச்சர் பதவி தரலாம்.. இஷ்டம்ன்னா வாங்க, இல்லாட்டி போங்க.. தவெகவை தவிக்க விட்டாரா எடப்பாடி பழனிசாமி? கொடுக்கறதை வாங்கிகிட்டு கூட்டணியில சேர நாங்க என்ன காங்கிரஸா? தவெகடா? தனிச்சு நின்னு அதிமுகவை 3வது இடத்துக்கு தள்ளி காட்டுறோம்.. தவெகவினர் ஆவேசம்.. மொத்தத்தில் திமுக குஷி.. மீண்டும் நம்ம ஆட்சி தான்.. உடன்பிறப்புகள் மகிழ்ச்சி..!

மார்ச் 15, 2026, 11:20
edappadi

விஜய் சொன்ன மாதிரி தவெகவுக்கு 100 சீட் கொடுத்துருங்க.. பாஜகவை மட்டும் நம்பி தேர்தலை சந்தித்தால் 3வது இடம் தான் கிடைக்கும்.. முதல்வர் பதவி இல்லைன்னாலும் திமுகவை தோற்கடிச்ச திருப்தியும், ஆளுங்கட்சி கூட்டணி என்ற பெயருமாவது இருக்கும்.. எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுக்கும் இரண்டாம் கட்ட தலைவர்கள்? முதல்வர் பதவியை விட்டு கொடுங்க, வேற வழியில்லை.. டெல்லி மேலிடமும் அழுத்தம்? என்ன செய்ய போகிறார் ஈபிஎஸ்?

மார்ச் 15, 2026, 08:06
vijay amitshah eps

அதிமுகவுக்கு 100 சீட், தவெகவுக்கு 100 சீட், பாஜக+பாமகவுக்கு 34 சீட்.. யாரு அதிகமாக ஜெயிக்குறாங்களோ அவங்க முதலமைச்சர்.. இதுக்கு ஓகேன்னா என்.டி.ஏ கூட்டணிக்கு வர்றேன்.. இல்லைன்னா பாத்துக்கிடலாம்.. டெல்லி பிரமுகருடன் கறாராக பேசினாரா விஜய்? விஜய் இல்லாத என்.டி.ஏ 50 சீட் கூட ஜெயிக்காது.. 3வது இடத்துக்கு போயிடும்.. ஈபிஎஸ் பதவிக்கும் ஆபத்து வந்துரும்.. இந்த டீலை ஒத்துக்கிட்டா என்.டி.ஏ ஈஸியா 200 சீட் அடிச்சிரும்.. விஜய் டீலுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? யோசிக்க வேண்டிய ஒரே ஆள் ஈபிஎஸ் தான்..

மார்ச் 14, 2026, 17:29
vijay eps stalin

திமுகவை வீழ்த்தனும்ன்னா, அதிமுகவோட சேரனும்.. அதிமுகவை வீழ்த்தனும்ன்னா திமுகவோட சேரனும்.. இதுதான் தமிழ்நாட்டோட விதி.. 91ல்ல திமுகவோட சேர்ந்த மூப்பனார் ஜெயலலிதாவை வீழ்த்தினார்.. 96ல்ல அதிமுகவோட சேர்ந்து கருணாநிதியை வீழ்த்தினார்.. 2011ல்ல ஜெயலலிதாவோட சேர்ந்து திமுகவை விஜயகாந்த் வீழ்த்தினார்.. 2016ல்ல கருணாநிதியோட சேர்ந்திருந்தா ஜெயலலிதாவை வீழ்த்தியிருக்கலாம், ஆனால் மக்கள் நல கூட்டணின்னு திசை மாறிட்டார்.. விஜய் நிலையும் அதுதான்.. திமுகவை வீழ்த்தனும்ன்னா, அவருக்கு ஒரே ஆப்ஷன் அதிமுக தான்..!

மார்ச் 14, 2026, 10:49