மீண்டும் இணையும் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி… ‘புறநானூறு’ படத்தின் புதிய அப்டேட் இதோ…

இயக்குனர் சுதா கொங்கரா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். குறைந்த அளவில் படங்கள் இயக்கி இருந்தாலும் இரண்டு தேசிய திரைப்பட விருதுகள், இரண்டு பிலிம்பேர் விருதுகள் மற்றும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஏர் டெக்கான் வானுர்தி நிறுவனத்தை துவக்கியவரான கோ. ரா. கோபிநாத்தின் கதையை தழுவிய சுயசரிதை திரைப்படம் ஆகும். கோவிட் காரணமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. பல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் பல விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவும் இயக்குனர் சுதா கொங்கராவும் இணைத்து மறுபடியும் பணியாற்றப் போவதாக கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவித்திருந்தனர். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘புறநானூறு’ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். ஜி. வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ‘புறநானூறு’ திரைப்படத்திற்கு எங்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்படுகிறது. சிறந்த படைப்பை உங்களுக்கு வழங்க பணியாற்றி வருகிறோம். விரைவில் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என படக்குழுவினர் தெரிவித்தனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.