ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான 12th ஃபெயில் படத்தின் தமிழ் ரீமேக்கில் சூர்யாவா?

ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் குமார் என்பவரின் உண்மைக் கதையை 12th ஃபெயில் என்ற பெயரில் படமாக்கியுள்ளார்கள். நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் நிலையில் உள்ள குடும்ப பின்னணியில் இருக்கும் இளைஞன் மனோஜ் குமார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வில், அவரது வகுப்பில் உள்ள அனைவரும் தேர்ச்சி பெற வேண்டுமென்று ஆசிரியரே , மாணவர்களுக்கு உதவுகிறார். விதிமுறைகளை பின்பற்ற வேண்டிய ஆசிரியரே இப்படி மாணவர்களுக்கு குறுக்கு வழியை சொல்லி கொடுக்கிறார்.

12th fail hero

அப்போது வரும் பறக்கும் படையிடம் மனோஜ் வகுப்பில் உள்ள அனைவரும் மாட்டிக் கொள்கிறார்கள். பரீட்சைக்கு படித்து வந்து தேர்வு எழுதிய மனோஜ் குமாரும் மற்றவர்களால் மாட்டிக் கொள்கிறார். இதன் பின், அவரை ஐபிஎஸ் தேர்விற்கு பயிற்சி பெற எது தூண்டியது.

எப்படி அவருடைய வாழ்க்கை சீரானது. அப்போது ஏற்பட்ட காதல் அவருக்கு எத்தகைய உந்துதலைக் கொடுத்தது. இது போல இந்த படத்தில் வரும் பல காட்சிகள் வாழ்வில் முன்னேற துடிக்கும், அரசு வேலைக்கு செல்ல நினைக்கும் இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும்.

அதுபோல வட இந்தியாவில் சில இடங்களில் இருக்கும் சீரற்ற கல்வி முறையை வெளிச்சப்படுத்துகிறது. 12th ஃபெயில் ஹிந்தி படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி ஹீரோவாக நடித்து கலக்கி இருப்பார். இந்தப்படம் வெளியான பின் பல திரைப் பிரபலங்கள் படத்தை பாராட்டினர்.

surya and 12th fail movie poster

கமல் ஹாசன் 12th ஃபெயில் படத்தினை பார்த்து விட்டு படத்தின் இயக்குனர் வினோத் சோப்ராவுக்கு இது போன்ற ஒரு நல்ல படத்தை எடுத்ததற்கு நன்றி எனக் கூறி பாராட்டியிருந்தார். இப்படி பலரது பாராட்டிற்கும் உள்ளான 12th ஃபெயில் படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தப்படத்தில் சூர்யாதான், விக்ராந்த் மாஸ்ஸி கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சூர்யா. அவரது லிஸ்டில் இப்போது புதிதாக 12th ஃபெயில் படமும் இடம் பெற்றுள்ளது. இந்தப்படம் ரீமேக்கானால், நல்ல வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.