சூர்யாவுக்கு 43, ஜி.வி.பி-க்கு 100, ‘தீ‘ யாய் பறக்கப் போகும் பாடல்கள் : புறநானூறு அப்டேட்

சூரரைப் போற்று படத்தின் மெகா வெற்றிக்குப் பின் நடிகர் சூர்யா மீண்டும் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இணையும் படம் தான் புறநாநூறு. ஏற்கனவே பயோபிக்கை படமாக இயக்கி வெற்றி கண்டு, சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம், சிறந்த இசை எனப் பல தேசிய விருதுகளைச் சுவைத்த சுதா கொங்கரா தற்போது இந்த முறை கையில் எடுத்திருப்பது அரசியல் களத்தை. 1965-ல் தமிழகத்தில் மிகத் தீவிரமாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கதைக் களமாகக் கையில் எடுத்துள்ளார். இவருடன் துல்கர் சல்மான், நஸ்ரியா போன்றோரும் நடிக்கின்றனர்.

சூர்யாவின் 43வது படமாக உருவாகும் புறநாநூறு இன்னொரு சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. அதாவது இப்படம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்-க்கு 100வது படமாகும். ஏற்கனவே சூரரைப் போற்று படத்தில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற ஜி.வி.பி. தற்போது மீண்டும் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளார். ஜி.வி.பி-யின் இசை தீம் மீயூசிக் மற்றும் பின்னணி இசையில் ரசிகர்களை சீட்டின் நுனியின் உட்கார வைப்பதில் கைதேர்ந்த வித்தைக் காரர்.

மாமன்னனுடன் மீண்டும் கைகோர்க்கும் ரத்னவேலு: வெளியான மாஸ் அப்டேட்

அதனால் தான் செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சோழர்களின் தீம் மியூசிக்கைக் எப்போது கேட்டாலும் உடலெல்லாம் புல்லரிக்க வைத்து விடுவார். அந்த இசை உணர்வுகளை வெளிப்படுத்தும் மந்திரம் எனலாம். மேலும் வெற்றி மாறனுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என அடுத்தடுத்து தீம் மியூசிக்கில் பட்டையை கிளப்பி வருகிறார்.

தற்பாது புறநாநூறு படத்திற்காக தனது முதற்கட்ட இசைப் பணிகளைத் துவங்கி விட்டார். ஜி.வி.பிரகாஷ். இதில் பிரபல பின்னணி பாடகி தீ முதல் பாடலைப் பாடவிருக்கிறார். பெரும்பாலும் சந்தோஷ் நாராயணன் இசையில் பல ஹிட் பாடல்களைப் பாடிய பாடகி தீ தற்போது ஜிவிபி-க்காக சூரரைப் போற்று படத்திற்குப் பின் மீண்டும் புறநாநூற்றில் பாடியுள்ளார்.

தற்போது சூர்யா சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் விரைவில் அதன் ஷுட்டிங் முடிந்து புறநாநூற்றின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா கமிட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...