நிலவுல முதல்ல கால் வச்சது வேணா ஆணா இருக்கலாம்!.. ஆனால், அதுக்கு உதவியதே ஒரு பெண்தான்.. சூர்யா பேச்சு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள கங்குவா படத்தின் டீசர் நாளை மாலை 4:30 மணிக்கு வெளியாகிறது.

கங்குவா படத்தின் இறுதிகட்ட டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வரும் நடிகர் சூர்யா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். பெண்களுக்கான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா பெண்களில் பெரிதாக சாதனையாளர்கள் இல்லை என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் ஆனால் பல விஷயங்களை நடத்திக் காட்டி வருவது பெண்கள் தான் என பேசியது இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பெண்களின் படைப்புகளை பட்டியலிட்ட சூர்யா:

நடிகர் சிவகுமார் பேசத் தொடங்கினால் பலரும் அவரது கருத்துக்களை கவனத்துடன் கேட்பார்கள். ஏகப்பட்ட விஷயங்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு சரளமாக பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடுவார். அவரது மகனான சூர்யா மட்டும் என்ன சும்மாவா என்பதுபோல அண்ணா பல்கலைக்கழகத்தில் அவர் பேசியது ஏகப்பட்ட பெண்களை கவர்ந்துள்ளது.

வோர்ட் பிராசர் தொடங்கி இளைஞர்களுக்கு ரொம்பவே பிடித்த பீர் வரை பெண்கள் தான் உருவாக்கினர் என்றும் அக்னி ஏவுகணை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது ஷீனா ராணி எனும் ஒரு பெண் தான் என பேசிய சூர்யா, நிலவில் முதலில் ஆம்ஸ்ட்ராங் காலடி எடுத்து வைத்திருக்கலாம். ஆனால், நிலவுக்கு மனிதர்களை கொண்டு செல்ல உதவிய சாஃப்ட்வேரை உருவாக்கி அந்த மிஷனுக்கு தூணாக இருந்தது ஒரு பெண் தான் என பேசி பட்டையை கிளப்பியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பெண்களை பற்றி சரவெடியாக பேசி முடித்து விரைவாக கிளம்பிய நடிகர் சூர்யா, கங்குவா படத்தின் டப்பிங் பணிகள் சென்று கொண்டிருக்கிறது எனது குரலும் அதற்காகத்தான் ஒரு மாதிரியாக உள்ளது என அப்டேட்டையும் கொடுத்துவிட்டு கிளம்பினார்.

கங்குவா திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது என்கிற அறிவிப்பு வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியாவில் சூர்யா ரசிகர்கள் அதிகம் குவிந்துள்ளனர். நாளை படத்தின் டீசர் வெளியானால் மிகப்பெரிய சாதனைகளை படைக்க தயாராகி விட்டனர்.

சூர்யா இந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக புறநானூறு மற்றும் இந்தியில் கர்ணன் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்த உள்ளார். ரோலக்ஸ் படத்தை சீக்கிரம் சூர்யா பண்ண வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...