கங்குவா படப்பிடிப்பு நிறைவு!.. கர்ஜிக்கும் லுக்கில் குதிரை மேல் அமர்ந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா!..

ஏழாம் அறிவு படத்திற்கு பிறகு மீண்டும் பீரியட் கதையைக் கொண்ட படத்தில் நடித்த வருகிறார் சூர்யா. அண்ணாத்த படம் படு தோல்வி அடைந்த நிலையில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியுடன் சிறுத்தை சிவா கங்குவா படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் சூர்யா, அனிமல் பட வில்லன் பாபி தியோல், பாலிவுட் நடிகை திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கங்குவா உருவாகி வருகிறது.

டிசம்பர் மாதம் சென்னை ஈவிபி சிட்டியில் நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது கிரேன் கேமரா நடிகர் சூர்யாவின் தோள்பட்டை மீது விழுந்து அடிப்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதன் பிறகு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஓய்வுக்காக சென்னையில் இருந்து மும்பை கிளம்பி சென்றார். பின்னர் அங்கிருந்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு சென்று வந்த சூர்யா சமீபத்தில் சென்னை திரும்பியதும் கேப்டன் விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

கங்குவா படப்பிடிப்பு நிறைவு:

மேலும் கலைஞர் 100 விழாவிலும் கலந்து கொண்டு பேசினார். அங்கே இயக்குனர் அமீர் பார்த்ததும் கட்டித் தழுவிய காட்சிகளும் சினிமா வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. கங்குவா படத்தை முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ள சூர்யாவுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்தை முடித்துவிட்டு, மிக விரைவில் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் படத்தை சூர்யா ஆரம்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கங்குவா படத்தில் கடைசி நாள் படப்பிடிப்பு இன்றுடன் தனது போர்ஷன் முடிவடைந்து விட்டதாக நடிகர் சூர்யா புதிய ஸ்டில்லை வெளியிட்டு அறிவித்து தனது ரசிகர்களுக்கு தரமான அப்டேட்டை கொடுத்துள்ளார்.

பிரம்மாண்ட ரிலீஸ்:

3டி தொழில்நுட்பத்தில் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பிரம்மாண்ட வெளியிடாக கங்குவா வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை டார்கெட் செய்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி, கமல்ஹாசனின் இந்தியன் 2, சீயான் விக்ரமின் தங்கலான், ரஜினிகாந்தின் வேட்டையன் என பல படங்கள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சம்மர் வெளியீடாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.