கமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட அமீர் கான்!.. யாரெல்லாம் செல்ஃபி எடுத்துருக்காங்க பாருங்க!..

நடிகர் கமல்ஹாசனின் 69 வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகநாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கமல்ஹாசன் இந்திய சினிமாவுக்கே கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என பல பிரபலங்களும் பாராட்டியுள்ளனr.

நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்து தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றவர் கமல் ஹாசான். தொடர்ந்து 69 வயதிலும் அடுத்தடுத்து கைவசம் அரை டஜன் படங்களை வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் 69வது பிறந்தநாள் விழா

விரைவில், கமல் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி, கமல் 233 மற்றும் தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. மேலும், மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள கைதி 2 மற்றும் விக்ரம் 3 உள்ளிட்ட படங்களில் கமல் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாயகன் படத்திற்கு பிறகு நெடுங்காலம் கழித்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கமல் இணைந்துள்ள படத்திற்கு தக் லைஃப் என தலைப்பிட்டு நேற்று அறிமுக டீசரையும் வெளியிட்டு இருந்தனர். மேலும், கமல் பிறந்தநாளை முன்னிட்டு ஈசிஆரில் உள்ள கமல் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிறந்தநாள் விழாவில் பாலிவுட் நடிகர் அமீர்கான், நடிகை குஷ்பூ உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர்.

அமீர்கான் உடன் பார்த்திபன் செல்ஃபி

அவர் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த விழாவுக்கு சென்றிருந்த நடிகர் பார்த்திபன் பாலிவுட் நடிகர் அமீர்கான் உடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

F S jHHXoAAA43W

இந்தி’ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம்,
மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர்.
ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.
எங்கே சென்றார் ?
இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார்.
இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்…
என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம்.
அவரின் அற்புத நட்பு அலாதியானது.
மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+
ரவி k சந்திரன் கூட்டனி மிரட்டியது ‘thug life’-ல்! என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து பணியாற்றி உள்ளதை அறிவித்திருந்த நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவிலும் பார்த்திபன் பங்கேற்றுள்ளார்.

சூர்யா செல்ஃபி

F TXFMraAAA5yTn

நடிகர் பார்த்திபன் மட்டுமின்றி கங்குவா படத்தின் நாயகன் சூர்யாவும் அந்த பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்டு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், யாரெல்லாம் நிகழ்ச்சிக்கு சென்றார்கள் என்பதை அறிந்து கொள்ளவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews