ஏ ஆர் முருகதாஸின் ரமணா திரைப்படத்தை தவறவிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 170 ஆவது திரைப்படமான வேட்டையன் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 171 வது திரைப்படத்தில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதங்களில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் திரை வாழ்க்கையில் தவறவிட்ட சில திரைப்படங்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளது. இது குறித்து முழு தகவலையும் பார்க்கலாம்.

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படமும் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படமும் முதலில் நடிகர் ரஜினியை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதைதான். அதன் பின் ரஜினி அதில் நடிக்க மறுக்கவும் இயக்குனர் சங்கர் கமல் மற்றும் அர்ஜுனை வைத்து படமாக இயக்கினார். அதேபோல் எந்திரன் திரைப்படமும் உலக நாயகன் கமலுக்காக உருவாக்கப்பட்டது. அதன் பின் நடிகர் ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி மீண்டும் ஒரு ஆல் டைம் பேவரட் திரைப்படத்தை மிஸ் செய்துள்ளார். அதுவும் இந்தியன் முதல்வன் திரைப்படத்தை போல சமூக விழிப்புணர்வு கொண்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படம். இந்த படத்தின் கதை முதலில் ரஜினியை மனதில் வைத்து ஏ.ஆர் முருகதாஸ் எழுதியுள்ளார்.  திரைப்படத்தின் கதையை எழுதி முடித்ததும் ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் கதையை கூறியுள்ளார்.

அப்பொழுது ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் நடிகர் ரஜினியிடம் தற்பொழுது கால்ஷீட் வாங்குவது அவ்வளவு எளிதல்ல அதே நேரத்தில் விஜயகாந்திடம் நான் கால்ஷீட் வாங்குவது எளிமையான விஷயம். மேலும் விஜயகாந்த் நடித்த வானத்தைப்போல திரைப்படத்தை ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரித்ததால் இருவருக்கும் இடையே ஒரு சிறந்த நட்புறவு இருக்கும் ஆகையால் இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தின் நடிக்க வைப்பது எளிமையானது எனக் கூறியுள்ளார். அதை அடுத்து இந்த கதை விஜயகாந்த் மற்றும் ரஜினியை தவிர மற்ற எந்த ஹீரோக்களுக்கு எந்தவிதத்தில் பொருந்தும் என்பது சரியாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதன் பின் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் கேப்டன் விஜயகாந்த் நேரில் சந்தித்து ரமணா படத்தின் கதையை கூறி சம்மதம் வாங்கியுள்ளார். இந்த திரைப்படமும் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி ஆல் டைம் பேவரைட் மூவியாக தமிழ் சினிமாவில் அமைந்துள்ளது. ஏ ஆர் முருகதாஸ் அவர்களின் விருப்பப்படி இந்த திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தால் இவ்வளவு வெற்றி பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

கடன் வாங்கி ராணுவ வீரர்களுக்கு உதவி செய்த எம்.ஜி.ஆர்!

அதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி மிஸ் செய்த இந்தியன் முதல்வன் திரைப்படங்களில் கிளைமாக்ஸ் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால் ரமணா திரைப்படத்தில் கிளைமாக்ஸ்சில் விஜயகாந்த் இறந்து விடுவது போன்ற காட்சிகள் அமைந்திருக்கும். மிகப்பெரிய பிரம்மாண்ட ஹீரோ படங்களின் இறுதி காட்சிகளில் இறந்து விடுவதை ரசிகர்கள் பொதுவாக விரும்புவதில்லை. அதை போல் ரஜினியும் இந்த கதைக்கு ஓகே சொல்வாரா என்பது சற்று தயக்கமாகவே இருந்தது. ரஜினி மட்டும் ரமணா திரைப்படத்தில் நடிப்பதாக இருந்திருந்தால் கிளைமேக்ஸ் பல மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். மேலும் அதிரடி சண்டை காட்சி, ரொமான்டிக் பாடல்கள் என படங்களில் பல மசாலாக்களை கலந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews