பொழுதுபோக்கு

அகர வரிசையில் அற்புதம் செய்த படங்களில் அயலான் எப்படி இருக்கும்?

பொதுவாக தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் ஆரம்பிக்கும் எந்த ஒரு படமும் சூப்பர்ஹிட் ஆகிவிடுகிறது. ஒரு சில படங்கள் வேண்டுமானால் அதில் விதிவிலக்காக இருக்கலாம். பெரும்பாலான படங்கள் அதிரிபுதிரி வெற்றியையேத் தந்துள்ளன.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜீத், விஜய் முதல் சிம்பு, சிவகார்த்திகேயன் வரை எல்லோருக்குமே இந்தப் படங்கள் வெற்றியைக் கொடுத்ததை நாம் அறிவோம். அப்படிப்பட்ட படங்களில் சிலவற்றைப் பார்க்கலாம்.

அண்ணாமலை

Annamalai

1992ல் வெளியான படம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ரஜினி, குஷ்பூ, சரத்பாபு, மனோரமா, ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் மாஸ் ரகங்கள். 1992ல் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று மாபெரும் வெற்றிப்படமாக்கினார்.

அழகன்

Azhagan

1991ல் பாலசந்தர் இயக்கிய படம். இசை அமைத்தவர் கீரவாணி. இவர் யாருமல்ல மரகதமணி என்று பெயரை மாற்றிக் கொண்ட ஆஸ்கார் நாயகன் பாகுபலி இசை அமைப்பாளர் தான். மம்முட்டி, பானுப்பிரியா, கீதா உள்பட பலர் நடித்துள்ளனர். சங்கீத ஸ்வரங்கள் என்ற பாடல் நம்மை மெய்மறக்கச் செய்யும் ரகம். அவ்வளவு இனிமையான பாடல் இது.

அட்டகாசம்

Attagasam

2004ல் வெளியான படம். சரண் இயக்கத்தில் தல அஜீத் நடித்த அட்டகாசமான படம். அவர் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். பூஜா கதாநாயகி. சுஜாதா, ரமேஷ் கண்ணா, நிழல்கள் ரவி, கருணாஸ், வையாபுரி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பரத்வாஜ் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் வரும் தெற்குச் சீமையிலே என்னைப் பத்திக் கேளு… தூளு கௌப்புறவன் தூத்துக்குடி ஆளு… என்ற பாடல் படத்திற்கு அதிரிபுதிரி வெற்றியைத் தந்தது.

அபூர்வ சகோதரர்கள்

Apoorva Sagotharargal

1989ல் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் உருவான படம். கமலின் வித்தியாசமான குள்ள உருவத்தைப் பார்ப்பதற்கென்றே மக்கள் திரையரங்கை நோக்கிப் படையெடுத்தனர். படத்தில் முற்றிலும் மாறுபட்ட 3 வேடங்களில் கமல் கலக்கியிருந்தார்.

அவருடன் இணைந்து ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, ரூபினி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜனகராஜ், மௌலி, டெல்லிகணேஷ், நாசர் என பலர் நடித்துள்ளனர். இது கமலின் சொந்தப் படம். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.

அலைபாயுதே

Alaipayuthe

மணிரத்னம் இயக்கத்தில் 2000த்தில் இந்தப் படம் வெளியானது. மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா, விவேக், பிரமிட் நடராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. காதல் சடுகுடு குடு, சினேகிதியே, பச்சை நிறமே, செப்டம்பர் மாதம் உள்பட பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

அயலான்

இந்தப் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள ஒரு அறிவியல் படம். காமெடி வழக்கம் போல இருக்கும். இந்தப் படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

அகர வரிசையில் படம் பெயர் இருப்பதால் வழக்கம் போல மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் விவசாயியாகவும், வேற்றுக்கிரகவாசியாகவும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது.

Published by
Sankar

Recent Posts