ரஜினியின் படத்தை பூஜையறையில் வைத்து வழிபட்ட வி.கே.ராமசாமி.. சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஓர் நல்ல மனசா?

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே தாத்தா வேடங்களிலும், அப்பா வேடங்களிலும் நடித்து அந்தக் கதாபாத்திரங்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர்தான் வி.கே.ராமசாமி. தனது இளம் வயதிலேயே பாய்ஸ் நாடகக் கம்பெனி மூலம் நாடகங்களில் நடித்து பின்னர் நாம் இருவர் என்ற படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தார். இவர் நடித்த படங்களில் எல்லாமே குணச்சித்திரம் மற்றும் காமெடி வேடங்கள் தான். இப்படி சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வி.கே.ராமசாமி.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி என அனைவரிடமும் நெருங்கிப் பழகியவர். ரஜினியுடன் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்திருக்கிறார். மேலும் சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். ஜோடிப்புறா என்ற படத்தினையும் இயக்கியிருக்கிறார் வி.கே.ராமசாமி.

ஒருமுறை வி.கே.ராமசாமியைப் பார்க்க அவரது நண்பர் அவர் வீட்டிற்குச் சென்ற போது அவரின் பூஜையறையில் ரஜினியின் புகைப்படத்தினையும் வைத்திருக்கிறார். ஆச்சர்யமடைந்த நண்பர் ஏன் என்று கேட்க அவருக்கு சரியானவாய்ப்புகள் இன்றி சினிமாவில் இருந்த போது ரஜினி தன் பல படங்களில் நடிக்க வைத்தாராம்.

மேலும்  ரஜினியை வைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்று எப்போதோ வி.கே.ராமசாமி கூறியிருந்தாராம். இதனை மனதில் வைத்திருந்த ரஜினி அருணாச்சலம் படத்தின் அறிவிப்பில் இடம்பெற்ற 8 தயாரிப்பளார்களில் வி.கே.ராமசாமியின் பெயரையும் சேர்த்திருந்தாராம். மேலும் அந்தப் படத்தில் அவருக்கும் ஓர் முக்கிய ரோலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டாருக்கு நடிக்கச் சொல்லிக் கொடுத்த நாகேஷ்.. ரஜினியின் முதல் பட அனுபவம் இதான்..

பின்னர் அந்தப் படம் வெற்றியடைந்து பிறகு ரஜினி வி.கே.ராமசாமியைச் சந்தித்து ஒரு சூட்கேஸ் நிறைய 25 லட்சம் பணத்தினைக் கொடுத்திருக்கிறார். அருணாச்சலம் படத்தின் லாபம் அது. மேலும் நடித்ததற்கும் தனியாக சம்பளம் பெற்றுக் கொடுத்துவிட்டாராம்.

இவ்வாறு தான் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது நான் எப்போதோ சொல்லியதை வைத்து என்னிடம் கேட்காமலேயே என்னைத் தயாரிப்பாளராக்கி அதன் மூலம் கிடைத்த லாபத்தையும் எனக்கு அளித்தவர் ரஜினி என்று நெகிழ்ச்சியாகக் கூறியிருக்கிறார் வி.கே.ராமசாமி.

எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு அடுத்தபடியாக நான் வணங்கும் கடவுளாகக் காட்சி தருகிறார் ரஜினி. அதனால் தான் அவர் புகைப்படத்தை பூஜையறையில் வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் வி.கே.ராமசாமி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.