கமல் ரசிகருக்காக ரஜினி செய்த உதவி.. நன்றிக் கடனுக்காக பல ஆண்டுகளாக தொடர்ந்த செயல்..

ரஜினி மற்றும் கமல் சினிமாவில் இரு எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், இருவருமே தங்கள் ரசிகர் பட்டாளத்தில் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை. ஒருவர் உலக நாயகன் என்றால் மற்றொருவர் சூப்பர் ஸ்டார். சினிமாவில் சம பலம் கொண்ட இவர்கள் தங்கள் ரசிகர்களையும் ஆதரிக்கத் தவறியதில்லை. கமல்ஹாசன் முதன் முதலாக தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்து விட்டு நற்பணி மன்றமாக மாற்றி சமூக சேவைக்கு வித்திட்டவர். இவரைத் தொடர்ந்து பல ஹீரோக்கள் உலக நாயகனின் வழியையே பின்பற்றினர்.

ரஜினியும் சப்தமே இல்லாமல் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார். இசையமைப்பாளர் தேவா ரஜினியின் சேவை மனப்பான்மை குறித்து நிகழ்வு ஒன்றைக் கூறுகையில், பாட்ஷா படத்தின் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. ஒருமுறை அவர் பாடல் சம்பந்தமாக ரெக்கார்டிங் ரூமுக்கு வந்து திரும்பிய போது வாசலில் கையில் ஒரு மாலையுடன் ஆட்டோ டிரைவர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

ரஜினி வெளியே வந்ததும் அவருக்கு அந்த மாலையை அணிவித்து ஆசி பெற்றுச் சென்றார். பிறகு ரஜினியிடம் யார் அவர்? உங்கள் ரசிகனா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை அவர் கமல் ரசிகர் என்றார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ரஜினி மேலும் சொல்ல ஆமாம் எனக்கு அவர் நான் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எனது அறைக்குப் பக்கத்தில் இருந்தார்.

“ஓவரா நடிச்ச உதைச்சு புடுவேன்..“ சிவாஜியிடம் திட்டு வாங்கிய வடிவேலு..

ஆனால் அப்போது கமல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்ததால் அவரது ரசிகராக அந்த டிரைவர் இருந்தார். அப்போதும் வாடகை ஆட்டோ ஓட்டி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் ‘முள்ளும் மலரும்‘ படத்தில் நடித்த போது எனக்குக் கிடைத்த சம்பளத்தில் அவருக்குச் சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கிக் கொடுத்தேன். அந்த நன்றியை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அவர் பிறந்த நாளுக்கு வந்து என்னைச் சந்தித்து மாலை அணிவித்து விட்டுப் போவது வழக்கம் என்று ரஜினி கூறியதாகக் கூறினார் தேவா.

உதவும் குணம் என்று வந்துவிட்டால் சாதி, மதம், இனம், உயர்ந்தவர், தாழ்ந்தவர், பகைவன், துரோகி எவருமே இல்லை என்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.