விஜய்யை வச்சு படம் பண்ணாதது ரொம்ப வருத்தம் தான்!.. வெளிப்படையாய் சொன்ன சுந்தர். சி!..

அரண்மனை 4 படத்தை இயக்கியுள்ள சுந்தர். சி விரைவில் அந்த படத்தை வெளியிட்டு உள்ளார். அதற்காக யூடியூப் சேனல் மற்றும் டிவி சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜயை வைத்து படம் ஏற்காதது சற்று வருத்தமாகத்தான் உள்ளது எனக் கூறியுள்ளார்.

சுந்தர். சி வருத்தம்:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சுந்தர். சி இயக்கி உள்ளார். அவர்களைத் தொடர்ந்து விஜய் மற்றும் அஜித்தை இயக்க நினைத்த சுந்தர். சி அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கி உள்ளார். ஆனால், இதுவரை தளபதி விஜய்யை வைத்து ஒரு படம் கூட அவர் இயக்கவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து சுந்தர். சி இயக்கிய அருணாச்சலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அதேபோல உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து சுந்தர். சி இயக்கிய அன்பே சிவம் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

விஜய் படத்தை மிஸ் செய்து விட்டேன்:

நடிகர் அஜித் குமாரை வைத்து உன்னைத்தேடி எனும் படத்தை சுந்தர். சி இயக்கி இருந்தார். காமெடி ஜானர் படங்களை இயக்குவதில் கெட்டிக்காரரான சுந்தர். சி காமெடி படங்களில் நடித்து அசத்த கூடிய தளபதி விஜய்யை எப்படி மிஸ் செய்தார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அரண்மனை 4 படத்தின் இயக்குனர் ஒரு சில வாய்ப்புகள் விஜய்யை வைத்து இயக்க கிடைத்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் அந்த படங்கள் கை கூடவில்லை. நடிகர் விஜய் அரசியல் வருகைக்காக தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை வைத்து கடைசி வரை படம் இயக்க முடியாதது சற்றே மனசுக்கு கஷ்டமாகத்தான் உள்ளது என சுந்தர். சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

உள்ளத்தை அள்ளித்தா, கலகலப்பு போன்ற படங்களை கொடுத்த சுந்தர். சி விஜய்யை வைத்து இயக்கியிருந்தால் மின்சாரக் கண்ணா, பிரெண்ட்ஸ், வசீகரா, பத்ரி ரேஞ்சுக்கு ஒரு படம் வந்திருக்கும் என்பது ரசிகர்களின் அபிப்ராயமாக உள்ளது.

அரண்மனை படத்தில் விஜய்சேதுபதியை இயக்கும் வாய்ப்பை கடைசி நேரத்தில் சுந்தர். சி மிஸ் செய்து விட்டார். விரைவில் விஜய்சேதுபதியை வைத்தாவது சுந்தர். சி படம் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அரண்மனை 4 படத்தில் தமன்னா மற்றும் ராஷி கன்னா என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் தமன்னாவின் கணவராக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...