வெண்ணை திருடிய கண்ணனின் லீலை தான் நமக்குத் தெரியும்… உண்மை தாத்பரியம் இதுதான்…!

பகவான் மகாவிஷ்ணு பூமாதேவியின் பாரத்தைக் குறைப்பதற்காகவும், தர்மத்தைக் காக்கவும், அதர்மத்தை அழிக்கவும் ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்தார்.

இன்றும், நாளையும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாமா…

Krish1
Krish1

கிருஷ்ணா, கண்ணா என்றாலே நம் மனது ஆனந்தத்தில் மூழ்கி விடும். கிருஷ்ணரின் லீலைகள் மக்களை மகிழ்விக்கும் விதத்தில் இருக்கும். ஆனால் மக்களுக்கேத் தெரியாமல் இந்த லீலைகள் மூலம் பல அரக்கர்களை அழித்தார். சமுதாயத்தைக் காப்பது என பல விஷயங்களை செய்து மக்களைக் காத்தருளினார்.

மகாபாரத போரின் போது அர்ச்சுனரிடம் தர்மத்தை உணர்த்திய தருணத்தை நாம் இன்றும் இந்து சமயத்தின் புனித நூலாக பகவத் கீதை என்று போற்றுகிறோம். அப்படிப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி இன்றும், நாளையும் வருகிறது.

ஜென்மாஷ்டமியில் வரும் ரோகிணி நட்சத்திரம் செப்.6ம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி செப்.7ம் தேதி காலை 10.20மணிக்கு முடிகிறது. செப்.6ம் தேதி இரவில் வருவதால் அன்றைய தினமே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

Krish3
Krish3

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எல்லாவற்றையும் காக்கும் பொருட்டு பல அவதாரங்களை எடுத்துள்ளார். அவற்றில் முக்கியமாக ஸ்ரீ ராமரின் அவதாரத்தை ராமாயணமாகவும், ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரத்தை தர்மத்தை நிலைநாட்டக்கூடிய மகாபாரதமாகவும் கொண்டாடப்படுகிறது.

பொதுவாக அஷ்டமி, நவமி திதிகளில் எந்த ஒரு சுபகாரியத்தையும் செய்ய மாட்டார்கள். ஆனால் கிருஷ்ணர் பிறந்த கோகுலாஷ்டமி தினத்தையும், ராமர் பிறந்த ராமநவமி தினத்தையும் வெகுவிமரிசையாகக் கொண்டாடுறாங்க. தென்னிந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதுமே கிருஷ்ணஜெயந்தி பரவலாக ஆங்காங்கே கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரின் பாதங்களை வரைந்து அவருக்குப் பிடித்த நைவேத்தியத்தையும் படைத்து வழிபட்டால் கிருஷ்ணரே வந்து அந்த வீட்டில் பிறப்பதாக ஒரு ஐதீகம் உண்டு. குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த கிருஷ்ணஜெயந்தி நல்ல பலனைக் கொடுக்கும்.

கிருஷ்ணர் நள்ளிரவு பிறந்ததால் இன்றைய தினம் இரவில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். கிருஷ்ணருக்கு வெண்ணை உள்பட இனிப்புப் பலகாரங்கள் பிடிக்கும் என்பதால் அவற்றை செய்து வழிபடுவது சிறப்பு.

பூஜையில் வெண்ணை வைத்து வழிபடுவது அவசியம். கிருஷ்ணரின் லீலைகளில் மிக முக்கியமானது வெண்ணை திருடிய லீலை. கோகுலத்தில் உள்ள ஆயர்கள் ஆடு மாடுகளை வளர்த்து வந்தனர். அவர்களுக்கு முக்கிய தொழில் இது தான்.

அப்போது அங்கு உற்பத்தியாகும் பால், வெண்ணை, தயிர் போன்ற பொருள்களை கம்சன் தினமும் எனக்குத் தர வேண்டும் என்று கட்டளையிட்டான். இதன் காரணமாக அங்கு உற்பத்தி செய்து வந்த கோபியர்களின் குழந்தைகளுக்குக் கூட பால், தயிர், வெண்ணை கிடைக்காது.

Krishna
Krishna

கிருஷ்ணர் வெண்ணையைத் திருடி தான் சாப்பிடுவதோடு மட்டும் அல்லாமல் தனது நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தார். அதன் காரணமாகக் கோகுலத்தில் இருந்த குழந்தைகள் உடல் வலிமை பெற்றதாகவும் கூறுவர்.

கிருஷ்ணர் வெண்ணை திருடினார் என்று தான் குற்றச்சாட்டு வைப்பர். ஆனால் அதன் மூலம் அனைவருக்கும் உடல் வலிமையைக் கொடுத்ததோடு அனைவரையும் ஒன்றிணைத்தார் என்பதே உண்மை.

அதை நினைவுபடுத்தும் வண்ணம் தான் இன்றும் மனித பிரமிடுகளை எழுப்பி மேலே கட்டி வைக்கப்பட்டு இருக்கும் வெண்ணைப் பானையை உறியடி என்ற பெயரில் எடுக்கும் நிகழ்வு மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews