நவராத்திரி, சைவ உணவு என களை கட்டும் புரட்டாசி

புரட்டாசி பிறந்து விட்டது புரட்டாசி மாதம் வந்துவிட்டாலே அந்த மாதம் பல ஊர்களில் புலால் வெறுக்கின்றனர். அதாவது இறைச்சிக்கடைகள் எல்லாம் காற்று வாங்கும் போதிய வியாபாரம் இருக்காது. சைவ உணவு மட்டுமே பலர் உண்கின்றனர் புரட்டாசியில்தான் முன்னோர்களுக்குரிய முக்கிய அமாவாசையான மஹாலய அமாவாசை வருகிறது. திதி தர்ப்பணம் முன்னோர்கள் வழிபாடு விட்டுப்போனவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு இந்த அமாவாசையில் செய்யப்படும்.


மேலும் சரஸ்வதிபூஜை, விஜய தசமி என எப்போதும் ஆன்மிக திருவிழா கோலம்தான்.

புரட்டாசி மாத பிரமோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் களை கட்டும். அதற்கு முன்பு பிரமோற்சவ குடை சென்னை நகரெங்கும் சுற்றி சென்னை நகரை ஆன்மிகமயமாக்கும்.

அம்பிகைக்குரிய நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் வரும். எங்கு பார்த்தாலும் கொலு, சுண்டல் என ஆன்மிக திருவிழாவாகவும் இருக்கும்.

பெருமாளுக்குரிய வழிபாடுகள் புரட்டாசியில்தான் களை கட்டும் பெருமாளுக்குரிய சனிக்கிழமை நாட்களில் அனைத்து விஷ்ணு ஆலயங்களிலும் விழா களை கட்டும்.

Published by
Staff

Recent Posts