2011ல தோனிக்கு நடந்ததே தான்.. கம்மின்ஸ் World Cup ஜெயிச்ச காரணம் இதுதானா?.. சும்மா பட்டாசா இருக்கே

இன்னும் ஆயிரம் ஐபிஎல் தொடர்கள் வந்தாலும் தனக்கென மவுசு குறையாமல் இருக்கும் என்றால் ஐம்பது ஓவர் உலக கோப்பை தொடரை கைகாட்டி விடலாம்.

அதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பைத் தொடரே ஒரு சிறந்த உதாரணம். இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளும் சும்மா பட்டாசாய் வெடித்தன என்று தான் சொல்ல வேண்டும்.

லீக் சுற்றுகளின் கடைசி கட்டம் வரை எந்த அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற ஆவல் இருந்ததால் ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிகளை கண்டு களித்தனர். இதனையடுத்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

இதில், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தன. இந்தியாவில் உலக கோப்பைத் தொடர், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இறுதி போட்டி என பல்வேறு சாதகங்கள் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் பக்கம் இருந்தது.

ஆனாலும், போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி, 240 ரன்களில் இந்திய அணியை சுருட்டியதுடன் மட்டுமில்லாமல், ஹெட் சதத்தின் உதவியுடன் இலக்கையும் எளிதாக எட்டிப்பிடித்து 6 ஆவது முறையாக ஐம்பது ஓவர் உலக கோப்பை சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது.

நல்லதொரு வாய்ப்பை இந்திய அணி இழந்ததை எண்ணி, இந்திய ரசிகர்கள் ஒரு பக்கம் வேதனையில் ஆழ்ந்தாலும் ஆஸ்திரேலிய அணியின் அசத்தலான ஆட்டத்தையும் பாராட்டி இருந்தனர்.
New Project 1

இதற்கு மத்தியில், உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்சுக்கும், இதற்கு முன்பு உலக கோப்பையை கைப்பற்றிய சில கேப்டன்களுக்கும் இடையேயான சில ஒற்றுமைகள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது.

இந்திய அணிக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதி போட்டியை ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. அதே போல, 2011 ஆம் ஆண்டின் போது நடந்த உலக கோப்பை தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றிருந்தது. பின்னர், 2019 ஆம் ஆண்டு மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், தற்போது நடந்து முடிந்த உலக கோப்பை தொடரை கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளது.
New Project 2

பாண்டிங், தோனி, மோர்கன் மற்றும் கம்மின்ஸ் ஆகிய நான்கு பேருமே திருமணம் செய்து கொண்ட ஆண்டில் இருந்து அடுத்த ஆண்டில் உலக கோப்பையை தங்கள் நாட்டிற்காக வென்று கொடுத்தனர். இப்படி ஒரு அருமையான கனெக்ஷன் இந்த 4 சாம்பியன் கேப்டன்கள் இடையே இருக்க, அடுத்தடுத்து உலக கோப்பை தொடர் நடைபெறும் ஆண்டிற்கு முந்தைய ஆண்டு அணிகளின் கேப்டன்கள் திருமணம் செய்து கொண்டால் கோப்பையை கைப்பற்றி விடலாம் என்றும் ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...