பொண்ண பாக்குறதுல மாப்பிளைக்கு அவ்வளவு வெறி! கலகலப்பான வைரல் வீடியோ!

Published:

நிஜ வாழ்க்கை சம்பவங்கள் சில சமயங்களில் திரைப்படங்களில் காட்டப்படுவதை விட அதிக வித்தியாசமாகவும் மகிழ்சியாகவும் இருக்கும் .உத்தரபிரதேசத்தின் பதோஹியில் நடந்த இதுபோன்ற ஒரு வினோதமான சம்பவம் பற்றி பார்க்கலாம்.

காதலியை திருமணம் செய்துகொள்ளும் ஒரு இளைஞன், அவளது திருமணத்திற்கு முன்பு அவளை கடைசியாக சந்திக்க விரும்பினான். ஆனால், திருமண சம்பிரதாயங்கள் காரணமாக பெண் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. எனவே, காதலன் தனது காதலியை சந்திக்க ஒரு தனித்துவமான திட்டத்தை போட்டுள்ளான்.

காதலர் பெண் வேடமிட்டு மணமகளை அவரது வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டார். அவர் ஒரு பெண்ணாக ஒரு முழுமையான ஒப்பனை செய்து அழகான சிவப்பு நிற லெஹங்காவை அணிந்து காதலியை சந்திப்பதற்காக மணமகளின் குடும்பத்தினரை ஏமாற்றுவதற்காக விக் அணிந்து முகத்தை முக்காடு போட்டுக் கொண்டார்.

பெண் வேடமிட்டு அந்த இளைஞர் பெண்ணின் வீட்டிற்கு வந்து, அவரைச் சந்திக்கச் சென்றபோது, ​​பெண்ணின குடும்பத்தினர் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரித்தனர். காதலனின் முயற்சி பலனளிக்காததால், பெண்ணின் குடும்பத்தினரிடம் சிக்கினார். அவர் ஓட முயன்றார் ஆனால் துரத்திச் சென்று பிடித்தனர்.

பெண் குடும்ப உறுப்பினர்கள் அவரது காதலனைப் பிடித்தவுடன், அனைவரும் அவரை வீடியோ எடுக்கத் தொடங்கினர். காதலன் தன் முகத்தை முக்காடு போட்டு மறைத்துக் கொண்டு அவனை விட்டு விலகச் சொன்னான்.

https://www.instagram.com/memewalanews/?utm_source=ig_embed&ig_rid=bca7aa6a-40ac-41d7-b704-11d8a1d50d80

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @memewalanews என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது, அவரது செயலுக்காக இளைஞர்கள் பரிதாபப்பட்டனர்.

 

மேலும் உங்களுக்காக...