கொட்டுக்காளி படத்திற்காக இப்படியொரு ரிஸ்க்கை எடுத்த சூரி!.. அவரே சொன்ன சூப்பர் மேட்டர்!..

நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சூரி தற்போது ஹீரோவாக களமிறங்கி கலக்கி வருகிறார். மேலும், சூரி தற்போது நடித்துள்ள கொட்டுக்காளி திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில் சூரி அப்படத்திற்காக தனது தொண்டையையே சேதமாக்கியுள்ளார் என்கிற ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சூரி வெண்ணிலா கபடிகுழு படத்தின் மூலம் பரோட்டா சூரி என பிரபலமானார். அதை தொடர்ந்து சுந்திர பாண்டியன், ஜில்லா, அஞ்சான், ரஜினி முருகன், அரண்மனை 2 போன்ற பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். மேலும் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இப்படத்திற்காக சூரி பல பாராட்டுகளை பெற்று வருகிறார்.

குரலை கெடுத்துக் கொண்ட சூரி:

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். அப்படம் அண்மையில் பெர்லின் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி திரைப்படம் பங்கேற்று வருகிறது.

கொட்டுக்காளி படத்தை சர்வதேச விழாவில் பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும் அப்படம் முழுவதும் அந்தக் குரலில் எப்படி பேசினார் என்று தான் கேட்டு கொண்டே இருக்கின்றனர். இயக்குனர் என்னிடம் குரலை மாற்றி பேச சொல்லும் போது, நான் தொண்டை கட்டிக் கொண்டது போல பேசி காட்டினேன். அவர் இது ஓகே எனக் கூறினார்.

அதோடு அதே குரலை எப்படி படம் முழுக்க மெய்ண்டைன் பண்ணுவன்னு தெரியல இருந்தாலும் அந்த குரலும் நேச்சுரலாக இல்லை. அதனால் ஒரு மருத்துவரை சந்தித்து எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொண்டைக்கட்டியது போல பேச வேண்டும் அதற்கு எதாவது செய்யமுடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் சிரித்துக் கொண்டு எல்லாரும் தொண்டையை சரி செய்ய தான் என்னிடம் வந்து கேட்பார்கள் ஆனால் நீங்க ஏன் இப்படி கேட்கிரிங்க என்றார். அது நான் நடிக்க போகும் அடுத்த புது படத்தில் படம் முழுவதும் தொண்டைக்கட்டியது போல பேச வேண்டும் என்றேன்.

அதற்கு அவர் இயற்கையாகவே தொண்டை கட்டுவதற்கு நாவப்பழம், பட்டை உள்ளிட்ட சில பொருட்களை அரைத்து சாப்பிட்டேன் எனக் கூறியிருந்தார். அதை செய்து தான் படம் முழுவதும் நான் அப்படி பேசியிருந்தேன் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.