குழந்தைகளை கவர வரும் குட்டி ஏலியன்!.. சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் எப்படி இருக்கு?

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள அயலான் டீசர் தற்போது வெளியானது.

இந்த ஆண்டு தீபாவளிக்கு அயலான் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டீசர் வரை அனைத்தும் வெளியான நிலையில், படத்தின் இசை திடீரென அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போட்டு உள்ளனர்.

இன்று நேற்று நாளை இயக்குநரின் அடுத்த படைப்பு

ஏற்கனவே பல ஆண்டுகள் இந்தப் படம் உருவாகி காத்திருக்கும் நிலையில், மேலும் காலதாமதம் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நடிகர் விஜய் சொன்னது போல சிவகார்த்திகேயன் குழந்தைகளின் மனதை பிடித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அயலான் திரைப்படம் ரிலீசானால் மேலும், அதிக அளவில் குழந்தை ரசிகர்களை சிவகார்த்திகேயன் கவர்வார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

குழந்தைகளை கவரும் சிவகார்த்திகேயன்

அனல் தெறிக்கும் ஆக்சன் படங்களில் ஹீரோக்கள் நடித்து வந்தாலும், ஃபேமிலி என்டர்டைன்மென்ட் இருந்தால் மட்டுமே அதிகப்படியான மக்கள் தியேட்டருக்கு வந்து பார்ப்பார்கள். அதிலும் குழந்தைகளை கவரும் விஷயங்கள் அந்த படத்தில் நிறைந்திருந்தால், பெற்றோர்களைக் கூட்டிக்கொண்டு தியேட்டருக்கு படையெடுத்து விடுவார்கள்.

அடுத்தாண்டு பொங்கலுக்கு ரஜினிகாந்தின் லால் சலாம், சுந்தர் சி யின் அரண்மனை, பாலா இயக்கியுள்ள வணங்கான் உள்ளிட்ட பல படங்களுடன் போட்டியாக அயலான் திரைப்படம் ரிலீசாக உள்ளது.

அயலான் டீசர் எப்படி இருக்கு?

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஏலியன் கான்செப்ட் திரைப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரப் போவது என்பதற்கு உதாரணமாக தற்போது டீசர் வெளியான நிலையில் பெரும் வரவேற்பு குவிந்து வருகிறது.

படத்தில் ஏலியன் காட்சிகள் பக்காவான சிஜி உடன் செய்திருப்பதாக ஏகப்பட்ட ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான ஹிப்ஹாப் ஆதியின் வீரன் திரைப்படத்திலும் குறைந்த பட்ஜெட்டில் சூப்பர் ஹீரோ படத்தை கொடுத்திருந்தனர். அதைப்போல அயர்லாந்து திரைப்படமும் குறைவான பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் சினிமா ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். தொடர்ந்து அனிருத்தின் பாடல்கள் அணிவகுத்து வரும் நிலையில், அவ்வப்போது ஏ ஆர் ரகுமான் இசையும் ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் பிரீத் சிங் சூர்யாவுடன் என் ஜி கே படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் சிறப்பு பரிசு

விஷ்ணு விஷால் நடித்த டைம் டிராவல் கதையான இன்று நேற்று நாளை படத்தில் அவருக்கு நண்பராக நடித்த கருணாகரன் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நண்பராக நடித்துள்ளார். ஏலியனை வீட்டு வேலைக்காரன் போல ட்ரீட் பண்ணும் அவரது காமெடி காட்சிகள் சிரிப்பை உண்டாக்குகிறது.

அதிலும், அந்த கடைசியில் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஏ ஆர் ரகுமான் இசையமைத்த மல்லிப்பூ பாடலை ஏலியன் கேட்கும் காட்சிகளும் சிவகார்த்திகேயன் பல்பு வாங்கும் சீன்களும் ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளன.

ஏலியன் எப்படி பூமிக்கு வருகிறது, சிவகார்த்திகேயனின் வயலில் இறங்கும் ஏலியன் அவருடன் சேர்ந்து கொண்டு என்ன என்ன சேட்டை எல்லாம் செய்யப் போகிறது என்பதை காண வரும் பொங்கல் வரை காத்திருப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews