ஒரே படத்தில் சிவாஜி, கமல், ரஜினி, .. நட்சத்திரம் படத்தின் கதை..!

சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், போன்ற நடிகர்களை வைத்து தனித்தனியாக படம் எடுப்பதே ஒரு பெரிய வேலை. ஆனால் இவர்கள் அனைவரையும் ஒரே படத்தில் வைத்து ஒரு படத்தை இயக்கினார் என்றால் அவர் தான் தாசரி நாராயண ராவ்.

இவர் ஏற்கனவே தமிழில் நூற்றுக்கும் மேலான படங்களை இயக்கி உள்ளார். பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன சிவரஞ்சனி என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்த முடிவு செய்தார். அந்த படம் தான் நட்சத்திரம்.

தெலுங்கு திரைப்படமான சிவரஞ்சனி படத்தில் முக்கிய கேரக்டர்களில் மோகன் பாபு மற்றும் ஜெயசுதா நடித்திருந்தனர். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கிலும் மோகன் பாபு அதே கேரக்டரில் நடிக்க ஜெயசுதா கேரக்டரில் ஸ்ரீபிரியா நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிவச்சந்திரன், மனோரமா, ஜெயமாலினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

நடித்தது ஆறு படங்கள் தான்.. ரூ.9000 கோடிக்கு சொந்தக்காரர் ஆகப்போகும் நடிகை ரியா..!

இந்த படத்தின் சிறப்பு தோற்றத்தில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், நாகேஷ்,  சாவித்திரி, ராதா, கே ஆர் விஜயா, மஞ்சுளா, ஸ்ரீவித்யா மற்றும் புஷ்பலதா நடித்திருந்தனர்.

images 61

நடிகையர் திலகம் சாவித்திரி… 19 மாதங்கள் கோமாவில்… உதவ ஆளின்றி தவித்த இறுதிக்காலம்…!!

இந்த படத்தின் கதை என்னவெனில் கிராமத்தில் இருந்த ஒரு பெண் திடீரென சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நடிகையாக மாறிவிடுவார். அவருக்கு ஏகப்பட்ட பணம், புகழ் கிடைக்கும். இந்த நிலையில் அவரது ரசிகர் மன்றத்தை வைத்து நடத்தும் ஒரு இளைஞர் அவரை திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்வார். ஆனால் ஸ்ரீபிரியாவால் திரைப்படத்துறையில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் இருப்பார். ஒரு கட்டத்தில் அவர் திரைப்படத்துறையிலிருந்து வெளியே வந்து தன்னை காதலிக்கும் ரசிகரை திருமணம் செய்ய முயற்சிக்கும்போது ஒரு திருப்பம் ஏற்படும். அதன் பிறகு நடக்கும் சோகமான முடிவு தான் இந்த படத்தின் கதை

இந்த படத்தில் ஸ்ரீபிரியா மிக அருமையாக நடித்திருப்பார். அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. மோகன் பாபு மற்றும் சிவச்சந்திரன் ஆகிய இருவரும் நன்றாக நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகையாக ஸ்ரீபிரியா நடித்திருந்ததால் அவருடன் நடிக்கும் நடிகர்களாக சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோர் நடித்து இருப்பார்கள். பெரும்பாலும் இந்த படத்தில் படப்பிடிப்பு காட்சிகளிலேயே முடிந்துவிடும் என்பதால் மெயின் கதை மங்கி விடும்.

இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைத்திருந்தனர். கண்ணதாசன் எழுதிய பொன்னாங்கன்னி என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. அதேபோல் கண்ணதாசன் எழுதிய இன்னொரு பாடலான அவள் ஒரு மேனகை என்ற பாடலும் வைகை நதியில் ஒரு என்ற பாடலும் நல்ல வரவேற்பு பெற்றது.

கேபரே நடனத்தால் புகழ் பெற்றவர்.. சல்மான்கான் அப்பாவுடன் திருமணம்.. நடிகை ஹெலன் வாழ்க்கைப்பாதை..!

இந்த படம் 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்றாலும் ஓரளவு வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. சிவாஜி கமல் ரஜினி உள்பட பல பிரபலங்கள் ஒரே படத்தில் நடித்தார்கள் என்ற பெருமை தவிர இந்த படத்திற்கு வேறு எந்த சிறப்பும் இல்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews