பாட மறுத்த சீர்காழி கோவிந்தராஜன்… வரிகள் கிடைக்காமல் திண்டாடிய கண்ணதாசன்… இந்தப் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு சீக்ரெட்-ஆ?

நீங்கள் 1970, 80, 90 களில் பிறந்தவரா..? இந்தப் பட வசனங்கள் எல்லாம் இன்றும் மனதில் நிற்கும். மார்கழி மாதங்களில் எந்தக் கோவிலைப் பார்த்தாலும் இந்த ஒலித்தட்டு கேட்காத இடமே இல்லை. பக்திப் படங்களில் இன்றளவும் தனி முத்திரை பதித்த திருவிளையாடல் படம் தான் அது. சிவபெருமானின் மீது இயற்றப்பட்ட திருவிளையாடற்புராணத்தை அடிப்படையாகக் கொண்டு ஏ.பி.நாகராஜன் இந்தப் படத்தை இயக்கியிருப்பார்.

சிவாஜி, சாவித்ரி, நாகேஷ், டி.எஸ்.பாலையா, என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளங்கள். வசூலை வாரிக் குவித்த படம். இந்தப் படத்தின் ஒலித்தட்டுக்கள் இன்றும் நம் மனதை விட்டு நீங்காதவை. பாடல்களும் அதுபோலத்தான். இப்படத்தில் இடம்பெற்ற ஒருநாள் போதுமா என்ற பாடலுக்கு பின்னால் ஒரு பெரிய சம்பவமே உள்ளது.

இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இப்பாடல் இடம்பெறும் கதைக்களத்தை கண்ணதாசனிடம் விளக்கி கூறுகிறார். யாராலும் வெல்ல முடியாத, ஆணவம் பிடித்த, இறைவனுக்கே சவால் விடுகிற பாடகன் பாடும் பாடல் என்று கூறி கண்ணதாசனை பாடல் எழுதக் கேட்கிறார்.

தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்

கண்ணதாசன் காலை முதல் மாலை வரை யோசித்தாலும், சரியான பல்லவி கிடைக்கவில்லை. பொறுத்து பார்த்த இயக்குனர் சற்று சலிப்புடன் கண்ணதாசனிடம் இன்று ஒரு நாள் போய்விட்டது, நீங்கள் பாட்டு எழுத ஒரு நாள் போதுமா, இல்லை இன்னொரு நாள் வேண்டுமா என்று கேட்டிருக்கிறார். உடனே கண்ணதாசன் இயக்குனர் சொன்ன வார்த்தைகளை வைத்தே ஒரு நாள் போதுமா பாடலை எழுதி முடித்தார்.

பாடல் தயாரானதும், இதற்கு எதிர் பாடலான பாட்டும் நானே என்ற பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாட உள்ளதால், இந்த பாடலை பாட அன்றைய காலக் கட்டத்தில் சிறந்த விளங்கிய சீர்காழி கோவிந்தராஜனிடம் கேட்கிறார்கள். பாடலை கேட்டு பாட ஒத்துக் கொண்டவர், முழு கதையைக் கேட்ட பிறகு பாட மறுத்துவிட்டார்.

கதைப்படி, தோற்றுப் போகக்கூடிய பாடலை தன்னால் பாட முடியாது என சீர்காழி கோவிந்தராஜன் மறுத்துவிட்டார். அதன் பிறகு கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா இந்தப் பாடலை பாடினார். கே.வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களும் காலத்தால் அழியாத காவியங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.