வசீகரக் கண்களால் தமிழ் சினிமாவையே கட்டி போட்டிருந்த சில்க் ஸ்மிதா இத்தனை திறமைகளை கொண்டவரா….?

ஆந்திராவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சில்க் ஸ்மிதா தமிழ் சினிமாவில் அழிக்க முடியாத கால் தடத்தை பதித்துள்ளார். எந்த கதாபாத்திரம் ஆனாலும் சரி கச்சிதமாக நடிப்பவர். அவரின் நடனத்தைப் பற்றி கூற வேண்டியதே இல்லை. சில்க் ஸ்மிதா ஒரு படத்தில் ஒரு காட்சியில் அல்லது ஒரு பாடலில் வந்தால் மட்டும் கூட அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். பல முன்னணி நடிகர்கள் இவருடன் நடிக்க விரும்பினர்.

silk3

சில்க் ஸ்மிதாவின் கல்வி அறிவு சற்று குறைவாக இருந்தாலும் கூட அப்போதைய ட்ரெண்டிங்க்கு ஏற்றார் போல் மாடர்னாக ஆடைகளை மிக அழகாக வடிவமைப்பார். இவர் நடித்த படங்களில் பல காட்சிகளுக்கும் மற்றும் மேடை நிகழ்ச்சிகளுக்கும் அவரே ஆடைகளை வடிவமைத்துள்ளார். படப்பிடிப்பின் இடையே கிடைக்கும் இடைவேளையில் கூட தன் கைகளாலேயே பல ஆடைகளை வரைந்து வடிவமைத்து கொண்டிருப்பாராம்.

இவர் வடிவமைத்து அணிந்து வரும் ஆடைகள்  மிகவும் நேர்த்தியாகவும் காண்போரின் கண்ணை கவரும் வகையில் கச்சிதமாகவும் இருக்குமாம். அது மட்டுமில்லாமல் தன் முகத்தை அழகு படுத்தும் கண்மை, மஸ்காரா மற்றும் லிப்ஸ்டிக் போன்றவற்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து தான் அணியும் மேக்கப்பிலும், சிகை அலங்காரத்திலும் கூட புதுவித ட்ரெண்டை உருவாக்கியுள்ளார் சில்க்ஸ்மிதா. தன்னை அழகாக காட்டி கொள்வதில் மெனக்கெடுபவர்.

silk 2

இத்தகைய திறமைகளை  கொண்டிருந்த சில்க் ஸ்மிதா எத்தகைய வேலையாக இருந்தாலும் முழு ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் செய்து முடிப்பார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கூட சில்க் ஸ்மிதா உடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம். அதன்படி இரு மேதைகள் என்ற படத்தில் சிவாஜி கணேசன் உடன் நடித்திருந்தார் சில்க் ஸ்மிதா.

தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் சில்க்ஸ்மிதா  என்று பெருமிதம் கொள்ளாத இயக்குனர்களே இல்லை என்று சொல்லலாம்.  அப்பேர்ப்பட்ட தனித்துவமும், திறமையும், புகழின் உச்சத்திலும் இருந்த சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது இன்றளவும் புரியாத புதிராகவே இருந்து கொண்டு வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews