சில்க் ஸ்மிதா வெர்ஷன் 2ஆக வந்த விஷ்ணுபிரியா : இவங்களுக்குள்ள இவ்ளோ ஒற்றுமையா?

தனது காந்தக் கண்களாலும் ஸ்லிம்மான உடல்வாகிலும் ரசிகர்களைக் கிறங்கடித்தவர் சிலுக்கு என்ற சில்க் ஸ்மிதா. 80-90களில் வெளியான படங்களில் கவர்ச்சி வேடங்களுக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்னும் அளவிற்கு தனது படங்களில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.

இருந்த போதிலும் சில நல்ல படங்கள் இவருக்கு பெயரை வாங்கிக் கொடுத்தது. வண்டிச் சக்கரம் என்னும்  படத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அலைகள் ஓய்வதில்லை, மூன்று முகம், கோழி கூவுது, சூரக்கோட்டை சிங்கக் குட்டி, அடுத்த வாரிசு, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை போன்ற படங்களில் பாடல்கள் என்றென்றும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

பெருசுகளை பெருமூச்சு விட வைத்த ஷகீலா இவ்வளவு தாராள மனசுக்காரரா?

ரஜினி, கமலுடன் பல திரைப்படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா கடந்த 1996-ல் தன்னுடைய வீட்டின் அறையில் பிணமாகக் கிடந்தார். தற்கொலையா வேறு ஏதும் காரணமா என்று இன்றும் முடிச்சுகள் அவிழாத நிலையில் அவரது இறப்பு மர்மமாகவே உள்ளது.

Silk smitha

சில்க் வெர்ஷன் 2 விஷ்ணு பிரியா

சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா போன்ற தோற்றம் கொண்ட விஷ்ணு பிரியா என்ற நடிகை மீண்டும் அவரை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதில் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் சில்க் ஸ்மிதா மறைந்த அடுத்த ஆண்டு 1997-ல் விஷ்ணு பிரியா பிறந்தார்.

ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!.. கமல் படத்தில் இணைந்த த்ரிஷா – நயன்தாரா?.. மாஸ் காட்டும் மணிரத்னம்!

மேலும் இருவரும் தமிழ் பேசும் தெலுங்கர் இனத்தைச் சார்ந்தவர்கள். சில்க் ஸ்மிதாவிற்கு ஒரு தம்பி இருப்பதுபோன்றே விஷ்ணுபிரியாவிற்கும் ஒரு தம்பி உள்ளார். மேலும் உடல்அமைப்பு மற்றும் மேனரிசம் அனைத்தும் சில்க் ஸ்மிதா போன்றே உள்ளதால் பழைய சில்க் ரசிகர்கள் விஷ்ணு பிரியாவை மீண்டும் சில்க் வெர்ஷன் 2-ஆக வந்து விட்டார் எனவும் இனி திரையில் தொடர்ந்து பார்க்கலாம் என்று  கொண்டாடி வருகின்றனர்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இவரும், எஸ்.ஜே. சூர்யாவும் வரும் காட்சிகளில் விசில் சப்தம் பறந்தது. சில்க் ஸ்மிதாவை பார்ப்பதற்கென்றே மீண்டும் மீண்டும் ரசிகர்கள் திரையரங்கம் சென்று இப்படத்தை வெற்றிப் படமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews