ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!.. கமல் படத்தில் இணைந்த த்ரிஷா – நயன்தாரா?.. மாஸ் காட்டும் மணிரத்னம்!

ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை நயன்தாரா தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா , விஜயுடன் வில்லு, சுர்யாவுடன் கஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்.

நயன்தாரா தற்போது நடிக்கும் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக இந்தியில் ஜவான் படமும், தமிழில் இறைவன் படமும் வெளியாகின. ஜவான் படத்தில் நயன்தாராவின் நடிப்பை பார்த்த பாலிவுட்டில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் தர ஆர்வத்துடன் முன்வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

த்ரிஷாவும் நயன்தாராவும்

ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அதன் பிறகு மெளனம் பேசியதே, சாமி, லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடித்து கலக்கினார். ஆரம்பத்திலேயே த்ரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

த்ரிஷா விஜயுடன் கில்லி , அஜித்துடன் மங்காத்தா, விக்ரமுடன் சாமி, சிம்புவுடன் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு கம்பேக் படமாக 96 படம் அமைந்து ரசிகர்கள் மனதில் நிலையாக நின்றுவிட்டார்.

மணிரத்னத்தின் ஃபேவரைட்

பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களை கவர்ந்த சில கதாபாத்திரங்களில் குந்தவையும் ஒன்று. அந்தக் கதாபாத்திரத்தில் த்ரிஷா எப்படி நடித்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களது எதிர்பார்பிற்கு த்ரிஷா தனது நடிப்பால் பதில் சொல்லிவிட்டார். இரண்டு பாகங்களிலுமே அவரது நடிப்பு அசத்தலாக இருந்தது. கடைசியாக அவரது நடிப்பில் லியோ வெளியானது. அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

த்ரிஷாவும் நயன்தராவும் தனிதனியாக அவர் அவர் இடங்களை நிலைநிருத்தி கலக்கி வருகின்றனர். பல வருடங்களாக நடிகைகளுக்குள் போட்டி என்றால் அதில் முதல் இரண்டு இடத்தில் இவர்கள் இருவரும்தான் இருப்பார்கள்.

கமலுக்கு 2 ஹீரோயின்கள்

நடிகை த்ரிஷா ஏற்கனவே கமலுடன் சேர்ந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ள நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள புதிய படத்தில் த்ரிஷா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இதுவரை கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்காத நடிகை நயன்தாராவும் அந்த படத்தில் தற்போது கமிட் ஆகியிருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நயன்தாரா மற்றும் சமந்தா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளனர். நயன்தாரா மற்றும் தமன்னா சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். முதல் முறையாக த்ரிஷாவும் நயன்தாராவும் இணைந்து கமல் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி சினிமா உலகையே பரபரப்பில் ஆழ்த்தி உள்ளன.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews