பெருசுகளை பெருமூச்சு விட வைத்த ஷகீலா இவ்வளவு தாராள மனசுக்காரரா?

1990-களின் பிற்பகுதியில் மலையாள சினிமாவையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகை என்றால் அவர் ஷகிலா தான். மம்முட்டி, மோகன்லால் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக ஷகிலாவின் படங்கள் ஓடியது என்றால் அது மிகையாகாது.

சென்னையை பூர்வீகமாகக் கொண்ட ஷகீலா தன் 17வயதிலேயே, துணை நடிகையாக, “பிளேகேர்ள்ஸ்” என்ற மலையாளப்படத்தில் அறிமுகமானார். வயதுவந்தோருக்கான அப்படத்தில் சில்க்சுமிதாவின் தங்கைவேடத்தில் நடித்தார்.குடும்ப வறுமை காராணமாக நடிப்புத் துறைக்கு வந்த ஷகிலாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம் “கிண்ணரத் தும்பிகள்” என்ற, மலையாளப் படமாகும்.

2000ஆம் ஆண்டில் வெளியான, வயதுவந்தோருக்கான இப்படம், மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, நான்கு கோடிரூபாயை, அக்காலத்திலேயே வசூல்  செய்தது. இப்படத்திற்குப்பிறகு, ஷகீலா வாழ்வில் ஏறுமுகம்தான். மலையாளத்தில் வெளியான இவர் படங்கள், இந்திய மொழிகளில் மட்டுமின்றி, நேபாள, சிங்கள மொழிகளிலும், மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருப்பு என ஒதுக்கியவர்கள் கண்களில் விரல்விட்டு ஆட்டிய ஹாலிவுட் நாயகி ஏஞ்சலினா ஜோலி
யாரைப்பற்றியும் எதற்கும், எந்த விமர்சனங்களுக்கும் கவலைப்படாமல் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் பல கவர்ச்சிப் படங்களில் நடித்து இன்று 40+ல் இருக்கும் ஆண்களின் தூக்கத்தைக் கலைத்தவர் என்றே சொல்லலாம்.

இந்திய கவர்ச்சிப்பட நடிகைகளிலேயே, மிகுந்த சர்ச்சைகளையும், எதிர்ப்புகளையும் எதிர்கொண்டு மீண்ட ஒரே நடிகை ஷகீலாதான். மலையாள திரையுலகினர், சில அரசியல்வாதிகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளானார் ஷகீலா. மது, புகை பழக்கங்களில் தீவிர ஆர்வம் கொண்டிருந்த ஷகீலா, தற்போது, புகைப்பழக்கத்தைக் குறைத்துக் கொண்டுள்ளார்.

ஷகீலா எழுதிய சுயசரித நூலின் அடிப்படையில், “ஷகீலா” என்ற மலையாளப்படம் தயாரிக்கப்பட்டது. “ரிச்சா சத்தா” என்பவர், ஷகீலா வேடத்தில், சுமாராக நடித்திருந்தார். படம் படுதோல்வி கண்டது. எனினும், ஷகீலா வரலாறு, ஓரளவு தெரிந்துகொள்ள மட்டும் இப்படம் உதவுகிறது. இதனால் மீண்டும் ஷகிலாவின் வாழ்க்கை தன் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் ஹுமாகுரோஷி, ஷகீலா வேடத்தில் நடிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

டாப் ஸ்டார் பிரசாந்தின் ரீ என்ட்ரி… கை கொடுக்குமா தளபதி 68?

ஷகீலாவின் வாழ்வில், பல காதல்தோல்விகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிலருடன், தான் உடல்ரீதியாகத் தொடர்பு வைத்துக்கொண்டதை, பேட்டி ஒன்றில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ள ஷகீலாவைப் பற்றி எப்போதும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

Shakeela

திருமணம் பற்றி யோசிக்காத ஷகிலா மாடலிங்கும், ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் மிலாவை வளர்ப்புமகளாக ஏற்று தற்போது இருவரும் வாழ்ந்து வருகின்றனர்.

அங்காடித்தெரு படத்தில், துணைநடிகையாக நடித்த சிந்து என்பவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டது. இக்கட்டான சூழலில், மருத்துவசிகிச்சைக்குப் பணம் தேவைப்பட்ட நிலையில், பலரும் கைவிரித்துவிட, ஷகீலாதான் பணஉதவியளித்து அவரைக் காப்பாற்றினார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் எய்தினார்.

விஜய் டி.வியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக ஷகிலாவின் செயல்பாடு, அவருக்குள் இருந்த சிறந்த பண்பு நலன்களையும் வெளிப்படுத்தியது. கவர்ச்சி பிம்பத்திற்கு அப்பாற்பட்டு, ஷகீலாவிற்கு நல்ல பெண்மணி, என்ற அளவிற்கு மதிப்பைத் தேடித்தந்தது எனலாம். இன்றும் சில படங்களிலும், யூ டியூப் சேனல்களிலும் தொகுப்பாளராகவும் வலம் வருகின்றார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews