டி. இமான் உடன் இணைந்த ஸ்ருதிஹாசன்.. அப்போ கண்டிப்பா சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர வாய்ப்பில்லை!

இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து வரும் புதிய படத்தில் இசையமைப்பாளராக டி. இமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பார்த்திபன் வரிகளில் உருவான ஐந்து பாடல்களை முதல் சந்திப்பிலேயே இசையமைத்து கொடுத்ததாக இமானுக்கு பாராட்டு பத்திரம் வாசித்து இருந்தார் பார்த்திபன்.

இந்நிலையில், தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இமான் இசையில் பாடியுள்ள பிரபல பாடகி குறித்த அறிவிப்பையும் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

பார்த்திபன் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் பார்த்திபன் படத்திற்காக டி. இமான் இசையில் பாடலை பாடியுள்ளார். மேலும் அந்த படத்தில், ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரவின் நிழல் படத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் நடித்து இருந்த நிலையில், தற்போது கமல் ஸ்ருதிஹாசன் பார்த்திபன் உடன் இணைந்து நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடைசியாக விஜய் சேதுபதி நடித்த லாபம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசன் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாத நிலையில், தெலுங்கு மற்றும் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் மீண்டும் தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசன் பார்த்திபன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க போகிறாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.

இமான் இசையில் பாடும் ஸ்ருதிஹாசன்

இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடி உள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க வாய்ப்பே இல்லை என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன் தற்போது பதிவிட்டுள்ள பதிவில், “ஸ்ருதியை மீறி, பூங்கொத்தை மீறி, என் நெற்றி காயத்தை கவனித்து விசாரித்தவர்களுக்கு நன்றி!
படம் நெத்தியடியா வரனும்னு மண்டைய உடைச்சுகிட்டு யோசிச்சதுல பட்ட காயமதுன்னு ஜாலியா சொல்லாம, பருவோ மருவோ அதை remove செய்ய ஒரு குட்டி surgery! 4 தையல் போட்ட ஒரு தையல்கிட்ட (பெண் டாக்டர்) “நீங்க படிச்சி முடிச்சதும் tailoring-ங்கும் வேறே கத்துகிட்டீங்களா?” என் கேட்க வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டே” சும்மாயிருங்க சார் குக்திடப் போறேன். “ என்றார்.
இப்போதைக்கு ஒரு பாடலின் போதைக்கு ஸ்ருதி ஒரு பாடல் மட்டும் பாட வந்தார் but பின் என்ன நடந்தது. அது நாளை…” என பதிவிட்டுள்ளார்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews