எம்ஜிஆருக்கு நிகர் இவர் மட்டும்தான்…. சோ ராமசாமி கூறிய அந்த நடிகர் யார் தெரியுமா?

மக்கள் திலகம் எம்ஜிஆர் சினிமாவில் ஒரு மிகப்பெரிய சரித்திரத்தை உருவாக்கியவர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் மொத்த தமிழக மக்களின் நம்பிக்கையும் பெற்று சுமார் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர். சினிமாவில் அடுத்த சிவாஜி அடுத்த ரஜினி என்று கூறுவது உண்டு ஆனால் அடுத்த எம்ஜிஆர் என்று யாரையும் இதுவரை குறிப்பிட்டதில்லை. ரசிகர்களும் அதனை ஏற்றுக் கொண்டதுமில்லை.

images 42

ஆனால் அந்த கால நடிகரான சோ ராமசாமி ஒரு நடிகரை எம்ஜிஆருக்கு நிகரானவர் என கணித்துள்ளார் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்தவர் தான் சோ ராமசாமி. இவர் யாருக்கும் பயப்படாமல் தனது கருத்துக்களை முன் வைப்பவர்.

images 41

இந்நிலையில் சோ ராமசாமி நடிகர் அஜித்குமாரை எம்ஜிஆருக்கு நிகரானவர் என கூறியுள்ளார். ஒரு பேட்டியில் மயில்சாமி அஜித் அவர்களிடம் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் உங்களை பிடிக்கும் என கூறியுள்ளார். ஆனால் அஜித் அதனை நம்பவில்லை. அதிலிருந்து இரண்டு மாதங்களில் பத்திரிகை ஒன்றுக்கு சோ ராமசாமி பேட்டி அளித்தபோது எம்ஜிஆருக்கு நிகரானவர் அஜித்குமார் என்று கூறியுள்ளார்.

images 40

எந்த பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தனது விட முயற்ச்சியின் மூலம் உச்சம் தொட்டுள்ளார் அஜித் குமார் தனது வளர்ச்சிக்காக எந்த விளம்பரத்தையோ ஆடம்பரத்தையோ விரும்பாத அவர் ரசிகர் மன்றத்தை களைத்த போதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர்.

images 44

அஜித் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த காலத்திலேயே எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போனது. அதனால்தான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் அஜித்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதே போன்று நடிகர் சோ ராமசாமிக்கும் நடிகர் அஜித்தை மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...