சிவாஜியின் இரண்டு ஹிட் பாடல்களுக்கு பின்னால் இப்படி ஒரு சோக கதையா?

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை அடையும், அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படங்களில் அமையும் பாடல்கள். இப்படி நடிகர் சிவாஜிக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்த இரண்டு முக்கிய பாடல்களுக்கு பின்னால் அமைந்த சோக கதையை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

முதல் பாடல் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான கௌரவம் திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணா நீயுமா என்ற பாடல். இந்த படத்தின் தயாரிப்பாளர் 1973 ஆம் ஆண்டு படத்தின் பாடல்களை எழுதுவதற்காக கண்ணதாசனிற்கு முன் பணம் கொடுத்து முன்பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் கவிஞர் கண்ணதாசன் தன் வேலைகளை மறந்து மலேசியாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதுவதில் கண்ணதாசன் பிசியாக இருந்த காரணத்தினால் பாடல்கள் சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என கண்ணதாசன் மீது பொதுவான கருத்தும் ஒன்றும் இருந்தது. அந்த நேரத்தில் கண்ணதாசனின் உதவியாளர் படத்தின் தயாரிப்பாளரை நேரில் சந்தித்து கவிஞர் கண்ணதாசன் எப்பொழுதும் இப்படித்தான் தாமதப்படுத்துவார் என கவிஞர் மீது சில குறைகளை கூறி தனக்கு அந்த வாய்ப்பை தரும்படி தயாரிப்பாளரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் தயாரிப்பாளர் அதற்கு மறுத்துவிட்டார்.

கண்ணதாசன் மலேசியாவில் இருந்து திரும்பியதும் இந்த செய்தியை கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தார். அதே நேரத்தில் படத்தின் இயக்குனர் பாடலின் சூழ்நிலையை குறித்து விளக்கினார். தான் எடுத்து வளர்த்த வளர்ப்பு மகன் தந்தையை எதிர்த்து நிற்பது போன்ற சூழ்நிலைக்கு பாட்டு எழுதும்படி விலக்கி இருந்தார். கண்ணதாசனும் தன் உதவியாளர் செய்த துரோகத்தை நினைத்து அதே மனநிலையிலே இருந்ததால் நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா எனும் பாடலை எழுதியிருப்பார். இந்த பாடல் முழுக்க உதவியாளரை தாக்கும் வண்ணத்திலேயே அமைக்கப்பட்டிருக்கும். அதன் பின் அந்த உதவியாளரை மன்னித்து ஏற்றுக் கொண்டார் கண்ணதாசன். அதனால் அந்தப் படத்தில் பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி எனும் மற்றொரு பாடலையும் எழுதி மனதில் நினைத்ததை பாடல் ஆக எழுதிக் கொடுத்தார் கண்ணதாசன்.

அடுத்த பாடல் சிவாஜி நடித்த பாகப்பிரிவினை படத்தில் இடம்பெற்ற ஏன் பிறந்தாய் மகனே பாடல். பீம்சிங் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்தனர். டி எம் சௌந்தரராஜன் பாடலை பாடியிருப்பார். ஆனால் டிஎம்எஸ் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடி முடித்ததும் ஏன் இந்த பாடலை பாடினோம் என்று வருத்தப்பட்டு, அதன் பிறகு வேறு எந்த மேடையிலும் அந்த பாடலை பாடவில்லை என்பதும் பலரும் அறியாத தகவல். டி எம் சௌந்தர்ராஜன் மூத்த மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேரம் பாகப்பிரிவினை என்ற படத்திற்காக அவரை பாடல் பாட அழைக்கிறார்கள். டிஎம்எஸ் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பாடல் என்பதால் அந்த துக்கத்திலும் பாடல் பாட சென்றுள்ளார்.

இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய ஏன் பிறந்தாய் மகனே என்ற பாடல் தமிழ் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. ஆனால் டி எம் சவுந்தர்ராஜன் மகன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஏன் பிறந்தாய் மகனே என்று அவருக்கு கொடுத்த பாடலால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அட, இப்படி ஒரு காம்போவா.. 69 வயதில் அறிமுக இயக்குனர்களுடன் கைகோர்க்கும் கமல்.. ஆக்ஷன் சும்மா பட்டையை கிளப்பும்

ஆனாலும் இசையமைப்பாளர்களிடம் மெட்டு கேட்ட டி எம் சௌந்தர்ராஜன் பாடலை ஒருமுறை பாடி பார்த்துள்ளார். அதன்பின் இந்த பாடலை ஒரே ஷாட்டில் பாடி முடித்து அவசரமாக மருத்துவமனை சென்று பார்த்த டி எம் எஸ் க்கு அவரது மகன் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சிகரமான செய்தி வருகின்றது. இதை கேட்டு மிகவும் வேதனை அடைந்த டி எம் சௌந்தரராஜன் இந்தப் பாடலை எந்த மேடையிலும் அவர் மீண்டும் ஒருமுறை பாடியதே இல்லை.

Published by
Velmurugan

Recent Posts