அட, இப்படி ஒரு காம்போவா.. 69 வயதில் அறிமுக இயக்குனர்களுடன் கைகோர்க்கும் கமல்.. ஆக்ஷன் சும்மா பட்டையை கிளப்பும்

இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக சினிமா பயணத்தை தொடங்கிய கமல், கடந்த 63 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் மிகப்பெரிய சகாப்தத்தையே எழுதி வருகிறார். பொதுவாக வெளிநாட்டு திரைப்படங்களில் கூட அறிமுகம் செய்யாத பல டெக்னாலஜியை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி அதற்கு பெருமை தேடித் தந்தவர் என்றால் நிச்சயம் கமல்ஹாசனை சொல்லலாம்.

எப்போதும் தன்னுடைய திரைப்படங்களில் ஏதாவது ஒரு புதுமையை உருவாக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே கவனம் செலுத்தும் கமல்ஹாசன், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ் சினிமாவை உலக அரங்கில் கவனம் பெற வைத்தவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான கமல்ஹாசனின் அடுத்தடுத்து திரைப்பட வரிசை, பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மிகவும் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வந்த கமல்ஹாசன், விக்ரம் படத்திற்கு அப்படியே நேர்மாறாக ஒரு ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம், பிளாக்பஸ்டர் திரைப்படமாக உருவாகி இருந்தது. கமலுக்கு பல ஆண்டுகள் கழித்து அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையும் விக்ரமை சேர, இதற்கடுத்து யாரும் எதிர்பாராத வகையிலான இயக்குனர்களுடன் இணைந்து வருகிறார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை முதல் பாகம் எடுத்த ஷங்கரே இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கும் திரைப்படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‘Thug Life’ என்ற திரைப்படத்திலும் கமல் நடிக்க உள்ளார். இந்த படத்தில், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

இதே போல, கமல் நடிப்பில் அடுத்து எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் என்றால் கல்கி 2898 திரைப்படம். பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது, மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படி அடுத்தடுத்து மிகப்பெரிய திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ள நிலையில், அவரது அடுத்த திரைப்படம் குறித்து அசத்தலான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
KH237: Kamal Haasan to play lead in stunt duo Anbariv’s directorial debut

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் இரட்டையர்களான அன்பறிவ், கமலின் 237 வது திரைப்படத்தை இயக்க உள்ளனர். இவர்கள் கேஜிஎப், விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணிபுரிந்து தேசிய விருதை வென்றுள்ள நிலையில், முதல் முதலாக திரைப்படம் ஒன்றையும் இயக்க உள்ளனர். அதுவும் கமலுடன் இணைந்துள்ளதால் நிச்சயம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.