சௌகார் ஜானகி இடம் அடித்து பேசிய சிவாஜி! உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம்!

1968 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் நடிகர் சிவாஜி உடன் இணைந்து சௌகார் ஜானகி, வாணிஸ்ரீ, அசோகன், சிவக்குமார், மனோரம்மா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பின் பொழுது நடிகர் திலகம் சிவாஜிக்கும் நடிகை சௌகார் ஜானகிக்கும் இடையே நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏவிஎம் தயாரிப்பில் உருவான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி பணக்கார, இளம் நடுத்தர வயதுடைய கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். முதலில் இந்த படத்தின் கதையை கூறிய பொழுது சிவாஜி நடிக்க மறுத்துவிட்டார். அதன் பின் கதையில் சில மாற்றங்கள் செய்த பிறகு நடிக்கும் படி ஒப்புக் கொண்டுள்ளார். படத்தில் சிவாஜி ஒரு பணக்காரர் வீட்டுப்பிள்ளை. ஆனால் ஏழை வீட்டுப் பெண் ஒருவரை காதலித்து அவருடன் உறவும் கொள்வார். அந்தப் பெண் கர்ப்பமான நிலையில் அவர் தந்தையுடன் தனியாக வாழ்ந்து வருவார். அந்த நேரத்தில் சிவாஜியின் தந்தை அந்த ஏழை பெண்ணை வீட்டோடு நெருப்பு வைத்து கொழுத்தி விடுவார். இதில் அந்த ஏழைப் பெண் இறந்து விடுவார் குழந்தை பிழைத்துவிடும். வருடங்கள் கடந்து செல்லும் தற்பொழுது சிவாஜி நடுத்தர வயதுடைய மிகப்பெரிய தொழில் அதிபராக மாறிவிடுவார்.

அவருடைய மனைவியாக சௌகார் ஜானகி நடித்திருப்பார். திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்த நிலையில் சிவாஜிக்கு குழந்தை இருக்காது. இந்த படத்தின் முக்கால் பாகம் படமாக்கப்பட்ட நிலையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் தொழிலாளர் போராட்டம் ஒன்று ஏற்பட்டது. இதன் காரணமாக படப்பிடிப்பு ஒரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கும் நடிகை சௌகார் ஜானகிக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்தனர். ஒரு வருடம் கழித்து மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டது. அப்பொழுது இரு நடிகர்களுக்கு இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல் படப்பிடிப்பின் பொழுது மட்டுமே பேசிக்கொள்வார்கள். அதன் பின் அமைதியோடு விலகி செல்வார்கள்.

ஒரு வருடத்திற்கு முன்பாக எடுத்து முடித்த காட்சிகளின் தொடர்ச்சியை அடுத்து படமாக்க பட குழு தயாராக இருந்தது. அதை போல் நடிகர் சிவாஜியும் படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தார், அந்த நேரத்தில் சௌகார் ஜானகியும் தயாராகி படப்பிடிப்பிற்கு நடந்து வந்தார். சௌகார் ஜானகியின் உடையை பார்த்ததும் சிவாஜிக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டு இருந்தது. இருவருக்கிடையே நேரடியாக பேச்சுவார்த்தை இல்லை என்ற காரணத்தினால் உதவி இயக்குனர் அழைத்து அந்த அம்மாவின் உடை சரி இல்லை ஒரு வருடத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் நடிகை சௌகார் ஜானகி கருப்பு நிற சேலை அணிந்திருந்ததாக கூறி சிவாஜி ஒரு கருத்தை முன் வைத்தார். அதற்கு சௌகார் ஜானகியும் மறுப்பு தெரிவித்தார். இப்படி படப்பிடிப்பில் அடுத்தடுத்து குழப்பங்கள் ஏற்பட தொடங்கியது.

அவரோட வாழ்ந்தா மட்டும் போதும்.. காதலனுக்காக சினிமாவையே தூக்கி போட்ட நடிகை.. பின்னர் நடந்த அற்புதம்

உடனே படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு ஒரு வருடத்திற்கு முன் இறுதியாக எடுக்கப்பட்ட காட்சிகளை போட்டு பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தார். அதன் பின் இறுதிகாட்சியும் திரையிடப்பட்டது, அதில் சௌகார் ஜானகி கருப்பு நிற சேலை அணிந்திருப்பது உறுதியானது. அதை பார்த்து தெரிந்து கொண்ட நடிகை சௌகார் ஜானகி உடனே நடிகர் திலகம் சிவாஜி இருக்கும் அறைக்கு வேகமாக விரைந்து சென்று உள்ளே போய் நடிகர் திலகத்தின் காலில் விழுந்தார். மேலும் நடிகர் சிவாஜி இடம் எப்படி நீங்கள் ஒரு வருடத்திற்கு முன்னதாக நடித்த படத்தின் வந்த காட்சியில் நான் உடுத்தி இருந்த சேலையின் நிறம் கூட மறக்காமல் வைத்திருந்தீர்கள் என வியப்புடன் கேட்டார் என்ன கோபம் இருந்தாலும் என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார்.

என் கவனம் முழுவதும் என் கதாபாத்திரத்தின் மீதுதான் இருக்கும் இந்த படத்தில் நடிக்கும் பொழுது இந்த கதாபாத்திரம் அடுத்த படத்திற்கு செல்லும் பொழுது அதை மனதில் எடுத்துக் கொள்வேன். திலகம் சிவாஜியின் தொழில் அர்ப்பணிப்பை பார்த்து நடிகை சௌகார் ஜானகி மிகவும் ஆச்சரியமடைந்தது மட்டுமில்லாமல் அவர் மீது இருந்த கோபத்தை விட்டு விட்டு உடனடியாக சமாதானம் ஆகியுள்ளார். இந்த சம்பவத்தை நடிகை சௌகார் ஜானகி ஒரு மேடையில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.