அவரோட வாழ்ந்தா மட்டும் போதும்.. காதலனுக்காக சினிமாவையே தூக்கி போட்ட நடிகை.. பின்னர் நடந்த அற்புதம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக திகழ்ந்தவர் பானுமதி. இவர் நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், கதாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்கி இருந்தார். தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகை என்ற புகழுடன் விளங்கிய அவர், தெலுங்கு சினிமாவின் முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சேர்த்து 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள பானுமதி, கடந்த 2001 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதினையும் வென்றிருந்தார். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நாயகி முதல் சில படங்களிலேயே காணாமல் போயிருக்க வேண்டிய சூழ்நிலையில் அதன் பின்னர் நடந்த சம்பவம் தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

முதலில் ஒரு சுமார் 10 திரைப்படங்கள் வரை நடித்திருந்த பானுமதி, ராமகிருஷ்ணா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவரும் பிரபல இயக்குனர் தான். ஆனால் பானுமதி அவரை காதலித்த போது, அவர் திரைப்படங்களில் பணிபுரிந்து தான் வந்துள்ளார். பிரபல நடிகை தன்னை காதலிப்பது கூட தெரியாமல் ராமகிருஷ்ணா இருந்த நிலையில், பானுமதியின் தந்தை அவரை அழைத்து பேசி உள்ளார். ஆனால், பானுமதியை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அதன் பின்னர் அவர் திரைப்படங்களில் நடிக்கவோ பாடவோ கூடாது என நிபந்தனை விதிக்க, பானுமதியின் தந்தைக்கு கோபம் வந்துள்ளது.

மேலும் ஏழ்மையான தன்னுடன் வாழ்வதாக இருந்தால் நான் தயார் என ராமகிருஷ்ணா கூற, மறுகணமே தான் காதலித்த ஒருவருடன் சினிமாவை புறந்தள்ளி விட்டு, திருமணம் செய்யவும் தயாரானார் பானுமதி. தொடர்ந்து பானுமதி – ராமகிருஷ்ணா திருமணமும் நடைபெற, பானுமதி வீட்டில் இருந்து ஒருவர் கூட அந்த திருமணத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.
P Bhanumathi - Upperstall.com

சினிமா இல்லாமல் எளிமையான வாழ்க்கையை ஆனந்தத்துடன் பானுமதி வாழ்ந்து வந்த சூழ்நிலையில், பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பிஎன் ரெட்டி தனது அடுத்த படத்தில் நிச்சயம் பானுமதியை நடிக்க வைக்க வேண்டும் என விருப்பப்பட்டுள்ளார். இதற்காக பலமுறை பானுமதியை தொடர்பு கொண்டு திரைப்படத்தில் நடிக்க அனுமதி கேட்ட சூழலில் தனக்கு கணவரும் குடும்பமும் தான் முக்கியம் என கூறி சினிமாவில் நடிக்க கிடைத்த வாய்ப்பை புறக்கணித்து விட்டார்.

ஆனாலும் விடாமல் தொடர்ந்து பிஎன் ரெட்டி பானுமதியை நடிக்க வைக்க முயற்சி செய்ய அவரது கணவரிடமும் இது பற்றி கூறியுள்ளார். மிகப்பெரிய நடிகையாக வரவேண்டியவர் ராமகிருஷ்ணாவால் தான் இப்படி ஆனதாக அந்த தயாரிப்பாளர் கூற, கணவருக்கு வருத்தமும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி தனது மனைவியிடமும் ராமகிருஷ்ணா விவாதித்த சூழலில் பின்னர் கணவர் ஏற்றுக் கொண்டதால் திரைப்படத்தில் மீண்டும் நடிக்கவும் முடிவு செய்தார் பானுமதி.

அப்படி அவர் ரீஎன்ட்ரி கொடுத்த படம் தான் ஸ்வர்க சீமா. இந்த தெலுங்கு படத்தில் நடித்த போது பானுமதிக்கு ஒரு குழந்தை இருந்தது. மேலும் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் பானுமதி முடிவு செய்ய, பின்னர் தென் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராகவும் அவர் மாறி இருந்தார். அதே போல, தனது தொடர் முயற்சியால் பானுமதியை திரும்ப நடிக்க வைத்த பிஎன் ரெட்டி தான் இப்படி ஒருவர் தென் இந்திய சினிமாவில் உருவாக காரணம் என்றும் பலர் தற்போது பாராட்டி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.