பொழுதுபோக்கு

பணத்தை விட நட்பு முக்கியம்… சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி… எந்த படம் தெரியுமா?

சினிமாவை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக உயிர் மூச்சாக ஏற்றுக்கொண்டு மதித்துப் போற்றியவர்தான் சிவாஜி கணேசன். திரையில் அவர் நடித்த கதாபாத்திரங்களை இனி யாரும்  நடிக்க முடியாது, நடிக்க முயற்சித்தாலும் அவரது உடல் மொழி முகபாவனை கொண்டு வருவது கஷ்டம். திரைத்துறையில் வரலாறு படைத்த மகா கலைஞர் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார் என்பது பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 1969வது வருடம் சிவாஜி கணேசன் நடித்த 128வது படம் காவல் தெய்வம். இந்த படத்தில் தான் சம்பளம் வாங்காமல் சிவாஜி நடித்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் கைவண்ணத்தில் உருவான கை விலங்கு எனும் புத்தகத்தின் வடிவம் தான் இந்த காவல் தெய்வம் திரைப்படம். இந்த படத்தை நடிகர் எஸ்வி சுப்பையா தயாரித்தார்.

சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக மனோரமா நடித்த ஒரே படம்.. யாகவா முனிவரை ஞாபகப்படுத்தும் படம்..!

இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சிவாஜி கணேசனை அணுக வேண்டும். ஆனால் அதற்கு தயங்கிய எஸ்வி சுப்பையா ஏவிஎம் சரவணன் அவர்களிடம் இதனை கூறியிருக்கிறார். அவர் சிவாஜி கணேசனிடம் வந்து எஸ்வி சுப்பையா தயாரிக்கும் ஜெயகாந்தனின் கை விலங்கு கதையை படமாக எடுக்கிறார், அதில் நடிக்க முடியுமா என கேட்டுள்ளார்.

அப்போது சிவாஜி கணேசன் அந்தப் படத்தை முழுக்க முழுக்க எஸ்வி சுப்பையா தான் தயாரிக்கிறாரா என கேட்டுள்ளார். ஏவிஎம் சரவணன் ஆமாம் என்று சொன்னவுடன் எஸ்வி சுப்பையா படத்தை தயாரிப்பதாக இருந்தால் படத்தில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் ஆனால் அதற்குப் பிறகு நான் நடித்ததற்கு பணம் எதுவும் வாங்க மாட்டேன். எஸ்வி சுப்பையா என்னுடைய நெருங்கிய நண்பர் மட்டுமல்லாது சக நடிகர். என் கூட நடித்துக் கொண்டிருந்த ஒரு நடிகர்.

அவர் சொந்தமாக ஒரு படம் தயாரிக்கிறார் என்றால் அந்த படத்தில் நடிக்க நான் பணம் வாங்கினால் நன்றாக இருக்காது. அதனால் பணம் வேண்டாம். நான் சும்மா நடித்துக் கொடுக்கிறேன் என கூறியுள்ளார்.

சிவாஜிக்கு ‘நவராத்திரி’.. எம்ஜிஆருக்கு ‘நவரத்தினம்’.. ஏ.பி.நாகராஜனின் 2 வித்தியாசமான படங்கள்..!

ஆனால் படத்தில் சிவாஜி கணேசன் நடித்து முடித்த பிறகு எஸ்வி சுப்பையா சிவாஜி கணேசனுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று நினைத்தார். நேரடியாக பணத்தை கொடுத்தால் சிவாஜி வாங்க மாட்டார் என்று ஒரு டிபன் கேரியரில் 15,000 ரூபாயை வைத்து அதனை சிவாஜியிடம் கொடுத்து இதில் சாப்பாடு உள்ளது நீங்கள் சாப்பிட வேண்டும் என கூறி கொடுத்துள்ளார்.

பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..

மேலே இருந்த பாத்திரங்களில் எல்லாம் டிபன் இருந்துள்ளது. கீழே இருந்த கடைசி பாத்திரத்தில் பணம் இருந்துள்ளது. அதை பார்த்ததும் சிவாஜிக்கு அளவுக்கு அதிகமாக கோபம் வந்தது. உடனடியாக எஸ்வி சுப்பையாவை அழைத்துவிட்ட சிவாஜி நான் சம்பளம் வாங்க மாட்டேன் என்று சொல்லி தானே இந்த படத்தில் நடித்தேன். எனக்கு நீ சம்பளம் கொடுத்தால் என்ன நியாயம் என்று கூறிய சிவாஜி அந்த பணத்தை எஸ்வி சுப்பையாவிடமே திரும்பிக் கொடுத்துவிட்டார். சிவாஜி கணேசனின் இத்தகைய செயல் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

Published by
Aadhi Devan

Recent Posts