ஷிமோகாவில் விஜய்- மக்கள் கூட்டம் அலைமோதுவதால் பரபரப்பு

கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் விஜய் நடிக்கும் தளபதி 64 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நடைபெறுவதால் விஜயை பார்க்க அதிக அளவு மக்கள் திரளுகிறார்களாம். மற்ற மாநிலங்கள் போல் அல்லாமல் இங்கு தமிழர்கள் அதிகம் இருப்பதும் ஒரு காரணம்.

4b79f1131a623dafdb51eb01956cf86b

விஜய் தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதாம். விஜயை பார்க்க மக்கள் அதிகளவில் கூடி விடுவதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி கூட ஏற்பட்டு விடுகிறதாம். முடிந்து திரும்ப வரும்போதும் இதே நிலைமைதானாம். ரசிகர்கள் விஜய் காரை அடையாளம் கண்டு துரத்துவதால் விஜயை வேறு வேறு கார்களில் அனுப்பி வைக்கிறார்களாம்.

இங்கு இந்த மாதத்துடன் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தலைமையிலான படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews