2வது திருமணத்துக்கு ரெடியான ஷங்கர் மகள்!.. நிச்சயதார்த்தம் நடந்துடுச்சு.. முதல் கணவருடன் விவாகரத்து!

டைரக்டர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு ரோகித் எனும் கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடைபெற்ற நிலையில், பாலியல் புகார் வழக்கில் ரோகித் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பெண்கள் விஷயத்தில் வீக் ஆனவர் என்றும் போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா இனிமேல் அவனுடன் வாழ மாட்டேன் என அம்மா வீட்டுக்கு வந்து விட்டார்.

ஷங்கர் மகள் நிச்சயதார்த்தம்:

அதன் பின்னர், விவாகரத்து சடங்குகள் சட்ட ரீதியாக நடைபெற்றன. தற்போது, அதெல்லாம் சைலன்ட் மோடில் நடைபெற்ற நிலையில், அடுத்த திருமணத்துக்கு ஐஸ்வர்யா ஷங்கர் ரெடியாகி விட்டார்.

முதல் கணவர் ரோகித்துடன் விவாகரத்து செய்து பிரிந்த நிலையில், இரண்டாவதாக உதவி இயக்குநர் ஒருவரை தனது மகளுக்கு மாப்பிள்ளையாக கொண்டு வந்திருக்கிறார் ஷங்கர். தருண் கார்த்திகேயன் எனும் அவர் பாடகராகவும் பாடலாசிரியராகவும் கலக்கி வருகிறார்.

எங்க அக்காவுக்கும் தருண் கார்த்திகேயனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாக தற்போது அதிதி ஷங்கர் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு உயர்த்தியவர் ஷங்கர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை உருவாக்குவது எப்படி என்பதை தென்னிந்தியாவுக்கே கற்றுக் கொடுத்தவர் என்றும் ஷங்கரை சொல்லலாம்.

அவர் இயக்கத்தில் அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. மேலும், ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படமும் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது. அடுத்து இந்தியன் 3 படமும் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது என்கின்றனர்.

ஐஸ்வர்யா ஷங்கரின் தங்கை அதிதி ஷங்கர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் ஹீரோயினாக விருமன் படத்தில் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு வெளியான மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் உடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

மூத்த மகள் ஐஸ்வர்யாவின் முதல் திருமணம் சரியாக அமையாத நிலையில், 2வது திருமணத்தை சீரும் சிறப்புமாக செய்ய ஷங்கர் ஏகப்பட்ட திட்டங்களை தீட்டி வருவதாக கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...