ஜெயிலர் எல்லாம் ஓரம்போங்க!.. சரித்திரம் படைத்த ஷாருக்கான்!.. ஜவான் 3வது நாள் அதிகாரப்பூர்வ வசூல் இதோ!

கடந்த மாதம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வந்த நிலையில், இந்த மாதம் வெளியான ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 3 நாட்களிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி மாஸ் காட்டி வருகிறது.

உலகளவில் நடிகர் ஷாருக்கான் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் பாட்ஷாவாக வலம் வருகிறார். மற்ற நடிகர்களை விட சமீப காலமாக தொடர்ந்து வசூல் வேட்டையில் தனது தனித்திறமையை பதிவு செய்து வருகிறார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான பதான் திரைப்படம் பாலிவுட்டில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், அந்த படம் 1000 கோடி வசூலை எளிதில் ஈட்டியது.

3வது நாள் வசூல் நிலவரம்

இந்நிலையில், அட்லீ இயக்கத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள நிலையில், 2000 கோடி வசூல் வேட்டை தொடும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதனை ஈடு செய்யும் வகையில் தினமும் அதிகாரப்பூர்வ வசூலை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனமே அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் 130 கோடி ரூபாயை வசூல் செய்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இரண்டு நாட்களில் 240 கோடி ரூபாயும் மூன்று நாட்களில் 384.69 கோடி ரூபாயையும் வசூல் செய்து மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 ஆயிரம் கோடி வருமா

ஷாருக்கானை தவிர பாலிவுட்டை காப்பாற்ற வேறு எந்த கான் நடிகர்களாலும் முடியவில்லை என்றும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 2 ஆயிரம் கோடி வசூல் படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் டாப் கான் ஷாருக்கான் தான் என்பதை நிரூபித்துள்ளார் என ஷாருக்கான் ரசிகர்கள் அமீர்கான் மற்றும் சல்மான் கான் ரசிகர்களை ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பிரபாஸின் சலார் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி அந்த வசூலை முறியடிக்கும் என்றெல்லாம் கனவில் கூட நினைக்க வேண்டாம் அந்த படம் ரிலீஸ் பயத்தால் தேதி தள்ளிப் போட்டு வருகின்றனர். பிரபாஸுக்கு அடுத்த டிசாஸ்டர் லோடிங் என்றும் பதிவிட்டு சண்டையை மூட்டி வருகின்றனர்.

ஜெயிலர் எல்லாம் காலி:

இன்னொரு பக்கம் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தின் வசூலை எண்ணி 5 நாளிலேயே ஷாருக்கான் முடித்து விடுவார். 3 நாட்களிலேயே விஜய்யின் பிகில், வாரிசு படங்களின் வாழ்நாள் வசூல் சாதனையை எல்லாம் ஷாருக்கான் முறியடித்து விட்டார். ஜவான் படம் ஹிட் அடிப்பதற்கு விஜய்யின் கேமியோ எல்லாம் தேவையில்லை என்றும் கேமியோ வந்திருந்தால், அதனால் தான் வசூல் வந்ததாக ரசிகர்கள் உருட்டுவார்கள் என்பதை ஷாருக்கான் புரிந்துக் கொண்டே அதை தவிர்த்தது நல்லது தான் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ஜவான் திரைப்படம் 2000 கோடி வசூலை கடந்து அமீர்கானின் தங்கல் திரைப்படத்தின் வசூலையும் முறியடிக்கும் என ஷாருக்கான் ரசிகர்கள் உறுதியுடன் நம்பி வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...