செல்வராகவனையும் விடாத பொண்டாட்டி தொல்லை!.. சண்டை போட்டுக்கிட்டே இருக்காராம்!..

டைரக்டர் கஸ்துரி ராஜாவின் மூத்த மகனான செல்வராகவன் துள்ளுவதோ இளமை படத்தில் திரைக்கதை எழுதி திரைத்துறையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தனது தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கி இயக்குநரானார். தற்போது அவர் மனைவி திட்டுவதாக வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடிகை சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்தினார். அதன் பின் சோனியாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்பு அவர்கள் இருவரும் கருத்து வேற்பாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் நடிப்பதை நிருத்தியிருந்த சோனியா அகர்வால் தற்போது தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்.

சோனியா அகர்வால் அடுத்து யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அதை தொடர்ந்து செல்வராகவன் சில ஆண்டுகள் கழித்து அவரிடம் உதவி இயக்குநராக இருந்த கீதாஞ்சலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மகள் லீலாவதி, மற்றும் மகன்கள் ஓம்கார்,ரிஷிகேஷ் என மூன்று குழந்தைகள் உள்ளன. மேலும் செல்வராகவனை சோனியா பிரிவதற்கான காரணம் இவர்களின் காதலாகக் கூட இருக்கும் என விமர்சனங்கள் வந்தன.

செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். பெரும்பாலும் தன் தம்பி தனுஷை வைத்தே படத்தை இயக்கியுள்ளார் செல்வராகவன்.

தனுஷ் தற்போது ராயன் படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தாயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் எஸ்.ஜே.சூர்யா,பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராயன் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வருகிறது.

தற்போது செல்வராகவன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் அவர் மனைவியிடம் எனக்கு நீ இருந்தும் உன் கூட இருக்க முடில, நீ இல்லாமலும் என்னால இருக்க முடில எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. பேசிக்கலி ஐ எம் கோயிங் மேட், ஏன்னா நீ என்ன திட்டிக்கிட்டே இருக்க இன்சல்ட் பன்ற நிறுத்து என்று செல்லமாக சண்டை போட்டு பேசியுள்ளார்.

ராயன் படத்தை முடித்து விட்டு அடுத்து தனுஷை வைத்து புதுப்பேட்டை 2 படத்தை செல்வராகவன் இயக்க திட்டமிட்டுள்ளார். 7ஜி ரெயின்போ காலனி படத்தையும் செல்வராகவன் இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

https://www.instagram.com/p/C36vlNAJHPd/

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...