டி.ராஜேந்தர்னாலே தாடி..! அதுக்கு என்ன தான் சேதி..? இங்க பாருங்க நாடி…! எல்லோரும் வாங்க இதைத் தேடி..!

80களில் தமிழ்த்திரை உலகில் நடிகர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர், இயக்குனர் என அனைத்துத் துறைகளிலும் கலக்கியவர் டி.ராஜேந்தர்.

இவரது படங்கள் என்றாலே அது நவரசங்களும் கலந்தே இருக்கும். அதனால் தான் படத்தின் பெயரைக்கூட 9 எழுத்துகளில் கொண்டு வந்தார். அடுக்குமொழி வசனத்திற்கு இவரை விட்டால் தமிழ் சினிமாவில் ஆள் ஏது? இது மட்டுமா இவரது அடையாளம்? நிறைய விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். தமிழ்த்திரை உலகின் அஷ்டாவதானி என்று அழைக்கப்படுபவர்.

இவர் இயக்கிய படங்களைப் பார்த்தாலே தெரியும். டி.ஆர். என்றாலே அவரது அடையாளம் தாடி தான். டி.ராஜேந்தர் தற்போது விஜய டி.ராஜேந்தர் என்றாகி விட்டார். தன்னோட தாடிக்குப் பின்னாடி இருக்கும் ரகசியத்தை அவரே சொல்கிறார். வாங்க, பார்க்கலாம்.

நான் அண்ணாமலை யுனிவர்சிட்டியில் எம்ஏ. எம்எச்டி 3 வருஷம் படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ காலையில 6.40 மணிக்கு டிரெய்ன். அதைப் பிடிக்கணும்னா காலைல 5.40 மணிக்கே வீட்டை விட்டுப் புறப்படணும். அப்படின்னா அதிகாலைல 4.30 மணிக்கு குளிக்கணும்.

இதையும் படிங்க… SPB சார் பாடலைக் கேட்டாலே உணர்ச்சிகள் தானாகவே வரும் – நடிகர் மோகன்!

அப்போ வீட்ல கரண்ட் கிடையாது. சிம்னி விளக்கு தான். அப்போ கண்ணாடியை முன்னாடி வச்சிக்கிட்டு ஷேவிங் பண்ண ஆரம்பிச்சா மொட்ட பிளேடு ஒழுங்கா ஷேவ் பண்ண முடியாது.

குடும்ப கஷ்டத்துல பிளேடு கூட வாங்க முடியாது. அம்மா, பாட்டிகிட்ட பிளேடு பிளேடுன்னு கத்துனேன். பிளேடு பிளேடுன்னு கத்துற. மூஞ்ச எவடா பாக்கப்போறான்னு பாட்டி சொன்னாங்க. அப்ப கண்ணாடியைப் பார்த்தேன். இதெல்லாம் ஒரு முகமான்னு மனசுக்குள்ள நினைச்சேன். ஒரு பொண்ணு விரும்ப முகம் முக்கியமல்ல.

அகம் தான் முக்கியம். முகத்தை பார்த்தா அது உண்மையான காதல் இல்லன்னு பாட்டி சொன்னாங்க. அன்னைக்கு வச்சேன் தாடி. அதுக்குப் பிறகு தாடி மேல கையை வைக்கும்போது எல்லாம் எனக்கு அந்த பிளேடு ஞாபகம் தான் வரும். இன்னைக்கு என்னால ஒரு பிளேடு பேக்டரியைக் கூட வாங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டி.ராஜேந்தர் இதை மட்டுமா சொல்கிறார். வாலிபம் எப்படி இருக்க வேண்டும்? அறிவாளிகளின் அடையாளம் எது என்றும் விவரமாக இப்படி சொல்கிறார். தாடி வக்கிறதுல பல அர்த்தம் இருக்கு.

இதையும் படிங்க… நீ யாருடா என் படத்தை தள்ளி வர சொல்றது!.. ரெட் ஜெயண்ட்டுக்கு சரியான பதிலடி கொடுத்த விஷால்!..

அறிவாளிகளின் அடையாளம் தாடி. கார்ல் மார்க்ஸ் வைக்காத தாடியா… பொண்ணு மேல ஆசையே வைக்கக்கூடாதுன்னா அவன் ஆண்மகனாவே இருக்க மாட்டான். காற்றுன்னா அதுல தென்றல் வரும். அது போல வாலிபன்னு சொன்னா அதுல காதல் வரும். இருந்தால் தான் அவன் வாலிபன்.

பசங்களுக்கு பள்ளிப்பருவம் முடிந்து காலேஜிக்குப் போகும்போது மீசை அரும்பும் போது மனதில் காதல் ஆசையும் அரும்புது. அது அரும்புவது மீசையா இல்லை காதலின் ஆசையா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...