சஷ்டி விரதமும், முருகப் பெருமானும்…..

நம்மில் பெரும்பாலானோர் பல விரதங்களை கடைபிடிப்பார்கள். இந்த விரதங்களில் சஷ்டி விரதமும் ஒன்று.  மிகவும்  பிரசித்தி பெற்ற இந்த விரதத்தை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்கின்றனர். அதுவும் செவ்வாய் கிழமையில் வரும் சஷ்டி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்நன்னாளில் முருகனுக்கு விரதம் இருந்து தரிசித்தால் பல பலன்களைப் பெறலாம்.

அதுவும் செவ்வரளி மாலை சார்த்தி முருகனை தரிசித்தால் நம்மிடம் உள்ள பல தோஷங்கள் நீங்கும். மேலும் இந்த சஷ்டி நாளில் பெரும்பாலும் கல்யாணம் ஆன பெண்கள் தங்களுக்கு முருகனைப் போன்ற ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்து வழிபடுவார்கள்.

ஏன், செவ்வாய் சஷ்டி இவ்வளவு சிறப்பு என்றால் முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாவார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த சஷ்டி நாளன்று முருகனை வணங்குவது மிகவும் நல்லது. மேலும், இந்த நாளில் விரதம் இருந்தால் நம் குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

ஆண், பெண்ணுக்கு உள்ள திருமண தடைகள் நீங்கி மிக விரைவில் திருமணம் நடைபெறுவதற்கான சாத்தியம் அமையும். 

மேலும் நீதிமன்ற வழக்குகள் வெற்றியைத் தரும். எனவே, சஷ்டி நாளில் கந்தனை விரதம் இருந்து வணங்கி பலனைப் பெற்று நன்றாக வாழ்வோம்.

Published by
Staff

Recent Posts