வானத்தைப்போல படத்தில் நடிக்க விரும்பிய சரத்குமார்.. முடியவே முடியாதுனு பிடிவாதமா சொன்ன விக்ரமன்.. காரணம் இதான்..

தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான திரைக்கதையை எமோஷனல் மற்றும் காமெடி உள்ளிட்ட பல குணச்சித்திரமான விஷயங்களை அழகாக கலந்து ஹிட் கொடுப்பதில் கில்லாடியாக இருப்பவர் தான் இயக்குனர் விக்ரமன். இவரது இயக்கத்தில் உருவான அனைத்து திரைப்படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்த நிலையில், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல என பல திரைப்படங்கள் எவர்கிரீன் திரைப்படமாகவும் அமைந்திருந்தது.

விஜய்யின் திரை பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் பல திரைப்படங்கள் பெரிதாக பெயர் எடுத்துக் கொடுக்காத நிலையில் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக திரைப்படம் தான் அவரின் திரை வாழ்க்கையை மாற்றி இருந்தது. இதே போல விஜயகாந்த் நடித்த வானத்தை போல திரைப்படமும் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான செண்டிமெண்ட்டை சொல்லும் விதமாக இருந்ததால் ரசிகர்கள் இன்றளவிலும் இந்த திரைப்படத்தை டிவியில் பார்க்கும் போது அதனை கொண்டாடி வருகின்றனர்.

இதே போல சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த சூர்யவம்சம் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆகும். இப்படி விக்ரமன் இயக்கத்தில் உருவான பல திரைப்படங்கள் என்றென்றுமே ரசிகர்களை சலிக்க வைக்காமல் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.

இதனிடையே வானத்தைப்போல திரைப்படத்தில் முதலில் சரத்குமார் நடிக்க இருந்ததாகவும் ஆனால் விக்ரமன் பிடிவாதமாக இருந்ததன் பின்னால் தான் விஜயகாந்த் இந்த படத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்திருந்ததை பற்றி தற்போது பார்க்கலாம்.

வானத்தைப்போல கதையை கேட்டதுமே அண்ணன் மற்றும் தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் சரத்குமார் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வெளியான நாட்டாமை திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் சரத்குமார் நடித்திருந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்ததால் அதே எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் வருவார்கள் என்றும் இதில் மிகவும் சாஃப்டான சரத்குமாரை பார்க்க நேரும் போது படம் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமையலாம் என்று தான் விக்ரமன் அவர் நடிக்க வேண்டாம் என்றும் பிடிவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான சவுத்ரியிடமும் விக்ரமன் சொல்ல சரத்குமார் நடிப்பதாக இருந்தால் வேறு ஒரு கதையை நான் அவருக்கு சொல்லி அதில் வேண்டுமானால் நடிக்கட்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த கதையை சௌத்ரி கேட்க அதில் விஜயகுமார் தந்தையாகவும் சரத்குமார் மகனாகவும் நடிக்கும்படியும் அந்த திரைக்கதை அமைந்திருந்தது.

ஆர் பி சவுதிரிக்கும் அந்த கதை பிடித்துப் போக விஜயகுமாருக்கு பதிலாக சரத்குமாரே இரட்டை வேடத்தில் நடித்துக் கொள்ளலாம் என்று தான் அவர் கூறியுள்ளார். அப்படி சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த படம் தான் சூர்யவம்சம். இதற்கிடையே வானத்தைப்போல திரைப்படத்தில் சரத்குமாருக்கு பதிலாக விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நடிக்க வைத்ததுடன் பெரிய வெற்றி படமாகவும் அதை மாற்றி இருந்தார் விக்ரமன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...