சந்தானத்தின் ’80ஸ் பில்டப்’ டிரெய்லர் எப்படி இருக்கு?

லொள்ளு சபா என்ற டிவி நிகழ்ச்சியில்,  படங்களை கலாய்த்து நடித்து வந்தார் சந்தானம் மற்றும் அவரது குழுவினர். அதற்கு பலமான ரசிகர் கூட்டம் இருந்து வந்தது. கவுண்டமணி போல நக்கல் வசனங்களே சந்தானத்தின் பிரதானம்.

காதல் அழிவதில்லை படத்தில் காமெடியனாக சந்தானம் அறிமுகமானார். அந்தப்படத்தின் ஹீரோவான சிம்புக்கு சந்தானத்தின் காமெடி சென்ஸ் பிடிக்கவே மன்மதன் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை கொடுத்தார். அந்த நட்பு அப்படியே தொடர்ந்தது வாலு படம் வரை காமெடிக்கு சந்தானத்தையே துணையாக கொண்டுள்ளார் சிம்பு.

காமெடியனாக நடித்து கொண்டிருந்த சந்தானம், அறை எண் 305ல் கடவுள் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார் சந்தானம். இருந்தாலும் சமீபத்தில் வெளியான குலுகுலு சந்தானத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

ஒரு சிலருக்கு குலுகுலு மிகவும் பிடித்த படமாகவும் ஆனது. டிடி ரிட்டன்ஸ் மற்றும் துல்லுக்கு துட்டு படங்கள் வசூல் ரீதியாக வெற்றியடைந்தது. இந்நிலையில், தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சந்தானத்தின் அடுத்த படம் வடக்குபட்டி ராமசாமி. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சந்தானம் நடித்திருக்கும் மற்றொரு புதிய படமான ’80ஸ் பில்டப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில்  சந்தானம், கமல் ஹாசனின் ரசிகனாக வருகிறார். சந்தானத்திற்கு ஜோடியாக பூவே உனக்காக சீரியல் நாயகி ராதிகா ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும் 80ஸ் பில்டப் படத்தில் கே.எஸ் ரவிக்குமார், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, கூல் சுரேஷ் என மேலும் பலர் நடித்துள்ளனர்.

சந்தானம் ஏற்கனவே நடித்த ஏ1 படத்தில் துக்க வீட்டில் காமெடி கலாட்டா செய்வது என்ற பின்னணியில் கதை நகரும். 80ஸ்பில்டப் கதையும் அதே போன்று சந்தானத்தின் தாத்தா இறந்த பின் அந்த வீட்டில் நடக்கும் சிக்கல்களை சமாளிப்பது மாதிரியாக காட்டப்படுகிறது. படத்தில் நட்சத்திர பட்டாளம் அதிகமாக உள்ளது. அதனால், டைமிங் காமெடிகளுக்கு பஞ்சமிருக்காது என உறுதியாக சொல்லலாம். ஆனால் அந்த காமெடிகள் படத்தோடு ஒன்றி ரசிக்கும்படி இருக்குமா என்று படம் வந்தபின் தான் தெரியும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...