விஜய்க்கு தெரியாமல் ஜேசன் சஞ்சய் படத்தின் பூஜையில் கலந்து கொண்ட சங்கீதா விஜய்!

தளபதி விஜய் தமிழில் மட்டுமின்றி தென் இந்திய திரை உலகின் முக்கிய ஹீரோவாக வலம் வருகிறார். தமிழைத் தொடர்ந்து மற்ற பிற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர் கூட்டம் தளபதி விஜய்க்கு உள்ளது. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகளவில் பிரம்மாண்ட வசூலையும், நல்ல விமர்சனத்தையும் பெற்றது. அந்த வகையில் தளபதி விஜய் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்த நேரத்தில் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் சிறுவனாக இருந்த ஜேசன் சஞ்சய் இருவரும் இணைந்து ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த பாடல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜேசன் படங்களில் ஹீரோவாக நடிக்க விரும்பாமல் தனது தாத்தா எஸ் ஏ சந்திரசேகர் போல இயக்குனராக அறிமுகமாக விரும்புவதாக பல தகவல் வெளியாகி இருந்தது.

அந்த வகையில் சமீபத்தில் லைக்கா நிறுவனத் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் அது குறித்து உறுதியான தகவல் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை பரிசளித்தது. அதில் ஜேசன் சஞ்சய் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவன உரிமையாளர்களிடம் கலந்துரையாடல் செய்யும் புகைப்படமும், படம் குறித்த அக்ரிமெண்டில் கையெழுத்து இடப்பட்ட புகைப்படமும் வெளியாகி டிரெண்டாக மாறியது.

அதைத்தொடர்ந்து இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஏற்பட தொடங்கியது. இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிப்பாரா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் ஜேசன் இயக்கும் முதல் திரைப்படத்தில் விஜய் ஹீரோவாக நடிக்க வாய்ப்பில்லை என உறுதியாகியுள்ளது. அதற்கு பதிலாக விஜய் சேதுபதி, அதர்வா, நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம் என்ன பல முன்னணி ஹீரோக்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று வருகிறது. ஆனால் உறுதியான ஹீரோ யார் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை மிக எளிமையான முறையில் நடந்துள்ளதாக பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பூஜையில் லைக்கா நிறுவனம் மற்றும் ஜேசன் சஞ்சய் இன்னும் சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும், ரகசியமாக நடந்த இந்த பூஜையில் தளபதி விஜய் அவர்கள் கலந்து கொள்ளவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது. விஜய்க்கு பதிலாக விஜய் மனைவி சங்கீதா விஜய் கலந்து கொண்டு மகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மன்சூர் அலிகான் பேசிய பேச்சுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையா?

மேலும் மகன் சஞ்சய்காக விஜயின் மனைவி சங்கீதா அவர்கள் லைக்கா நிறுவனத்திடம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தன் மகன் விருப்பம் கண்டிப்பாக நிறைவேற வேண்டும் என்ற காரணத்தினால் விஜயின் மனைவி சங்கீதாவே களத்தில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் அவர்கள் மகனின் பட பூஜையில் கலந்து கொள்ளாததற்கு முக்கிய காரணம், விஜயின் உதவியின் மூலமாகத்தான் ஜேசன் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் என்ற தவறான கட்டுக் கதைகளை தவிர்க்கும் பட்சத்தில் படத்தின் பூஜை மிக எளிமையாக நடந்துள்ளது என கூறப்படுகிறது.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தில் தளபதி விஜய்யின் தலையீடு இருக்காது என்றும் அந்த படத்தின் வெற்றி, தோல்வி என இரண்டும் சஞ்சயின் திறமையை சார்ந்தே அமையும் என்றும் விஜய் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆங்கிலத்தில் பல ஷார்ட் பிலிம்களை எடுத்து வந்த ஜேசன் சஞ்சய் தற்பொழுது தமிழில் இயக்குனராக அறிமுகமாக உள்ளது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜேசன் சஞ்சய் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டிற்காக விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...