சமுத்திரக்கனி-யோகிபாபு கூட்டணியில் ‘யாவரும் வல்லவரே’… இந்த வாரம் ரிலீஸ்…

‘வால்டர்’, ‘பாரிஸ் ஜெயராஜ் ‘ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த 11:11 ப்ரொடெக்ஷன் டாக்டர் பிரபு திலக் தயாரிப்பில் என். ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ள திரைப்படம் ‘யாவரும் வல்லவரே’. இயக்குனர் என். ஏ. ராஜேந்திர சக்கரவர்த்திக்கு இது அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி, ஜோ மல்லூரி, போஸ்டர் நந்தகுமார், ரித்விகா, அருந்ததி மேனன், தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தை பற்றி தயாரிப்பாளர் பிரபு திலக் கூறுகையில், இது நான்கு வெவ்வேறு களங்களில் நடக்கும் சம்பவங்களை இணைத்து ஹைப்பர்லிங்க் வடிவில் உருவான வித்தியாசமான திரைப்படம். இயங்குனர் என். ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இப்படத்தின் கதையை விவரிக்கையில் அந்த ஐடியா வித்தியாசமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு அவர்களின் திறமையான நடிப்பில் கண்டிப்பாக இப்படம் வெற்றிப் பெரும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

இத்திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி கூறியிருப்பது என்னவென்றால், நம் சமூகம் தங்களுக்குள்ளேயே ஹீரோக்களை கண்டறிய வேண்டிய அவசியத்தை இப்படம் புரிய வைக்கும். மேலும் ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் பொழுது ஒரு மீட்பருக்காக காத்திருக்காமல், அந்த சந்தர்ப்பத்தில் நமக்காக எழும்பி உதவும் சாமானியர்களே ஹீரோக்கள் என்ற கருத்தை மையமாக கொண்டு இப்படம் இருக்கும் என்று விவரித்துள்ளார் இயக்குனர்.

இத்திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு ஜெய் மற்றும் படத்தொகுப்பு ஜி. ராமாராவ் செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டீஸர் வெளியான நிலையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...