சமந்தாவுக்கு ஆப்படிக்க திட்டமிட்ட ஆலியா பட்?.. அச்சச்சோ அந்த படத்துல இவர் ஹீரோயினா நடிக்கப் போறாரா?

கடைசியாக கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் தான் சமந்தா நடித்த கடைசி படம். அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளே கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பாலிவுட்டில் வருண் தவான் உடன் இணைந்து நடித்த சிட்டாடல் வெப் சீரிஸ் இன்னமும் வெளியாகாமல் உள்ளது.

அல்லு அர்ஜுன் படத்திற்கு கடும் போட்டி:

சில மாதங்கள் நடிக்கப் போவதில்லை என்றும் சிகிச்சைக்காக ஓய்வெடுக்க போகிறேன் என்றும் சமந்தா கூறியிருந்த நிலையில், ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ஐஸ்கிரீம் விளம்பரம், கோல்டு லோன் விளம்பரம் என நடித்து வரும் சமந்தா அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தில் நடிக்கப் போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த படத்திற்கு மூன்று நடிகைகள் மத்தியில் கடும் போட்டி இருந்து வருவதாக கூறுகின்றனர்.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவே சமந்தாவை தான் அணுகியுள்ளனர். ஆனால், அப்போது கால் ஷீட் காரணமாக சமந்தாவால் நடிக்க முடியவில்லை. ஓ சொல்றியா மாமா பாடலுக்கு மட்டும் அல்லு அர்ஜுன் கேட்டுக் கொண்ட விலையில் குத்தாட்டம் போட்டிருந்தார்.

திரிஷா vs சமந்தா vs ஆலியா பட்:

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தில் சமந்தா தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அவருக்கு போட்டியாக நடிகைகள் திரிஷா மற்றும் ஆலியா பட் தற்போது அந்த படத்தை பிடிக்க முயற்சி செய்து வருவதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொன்னியின் செல்வன், லியோ மற்றும் விடாமுயற்சி என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் திரிஷா அல்லு அர்ஜுன் படத்தில் படிப்பதற்காக முயற்சி செய்து வருவதாகவும் ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்த ஆலியா பட் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த பாலிவுட்டிலும் அந்த படம் மிகப்பெரிய வசூலை ஈட்டும் என்பதால் படக்குழுவினர் தற்போது குழப்பத்தில் இருப்பதாக கூறுகின்றனர்.

அல்லு அர்ஜுன் எந்த ஹீரோயினை தேர்வு செய்கிறாரோ அவரையே கமிட் செய்ய அட்லி முடிவு செய்திருப்பதாகவும் ஏற்கனவே அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படத்தில் சமந்தா நடித்துள்ள நிலையில், ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுத்தது போல சமந்தாவுக்கும் அட்லி கொடுப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் வரும் ஏப்ரல் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புஷ்பா 2 படத்தின் டீசர் அன்றைய தினம் வெளியாக உள்ளது. மேலும், அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என தெரிகிறது.

அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் என ஒரே A எழுத்தாக உள்ள நிலையில், ஆலியா பட்டுக்கு ஜாக்பாட் அடிக்குமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews